ஒருவருட போராட்டத்திற்கு கிடைத்த வரலாற்று வெற்றி: வேளாண் சட்டம் வாபஸ் குறித்து பிரபல ஹீரோ

  • IndiaGlitz, [Friday,November 19 2021]

கடந்த சில மாதங்களுக்கு முன்னாள் மத்திய அரசு 3 புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்திய நிலையில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த ஒரு வருடமாக போராட்டம் செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் கூட பல அரசியல்வாதிகள் இந்த சட்டத்தை எதிர்த்து குரல் கொடுத்தார்கள் என்பதும், நடிகர் கார்த்தி உள்பட ஒருசில நடிகர்களும் தங்களது சமூக வலைத்தளத்தில் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மூன்று வேளாண் சட்டங்களும் வாபஸ் வருவதாக பிரதமர் மோடி இன்று அறிவித்துள்ளார். இதனை அடுத்து விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அந்த வகையில் நடிகர் கார்த்தி இதுகுறித்து கூறியிருப்பதாவது:

மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக நம் பிரதமர் அறிவித்திருப்பது, தங்கள் உயிரையை ஈந்து போராடிய எளிய வேளாண் மக்களின் ஒருவருட இடைவிடாத போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி. போராடியவர்களுக்கும் புரிந்து கொண்ட அரசுக்கும் அன்பும் நன்றியும்.

More News

கிரிக்கெட் இருந்து ஓய்வுபெறும் “மிஸ்டர் 360“… ரசிகர்கள் அதிர்ச்சி!

கிரிக்கெட் உலகில் “மிஸ்டர் 360“, “சூப்பர் மேன்“, “360 டிகிரி பேட்ஸ்மேன்“ என்று பல்வேறு பட்டப்பெயர்களை சுமந்த ஏபி டி வில்லியர்ஸ்

3 வேளாண் சட்டங்களும் வாபஸ்… பிரதமர் மோடி அறிவிப்பு!

மத்திய அரசால் நடைமுறைப் படுத்தப்பட்டு இருக்கும் புதிய வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி

டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் திடீர் பதவி விலகல்…. பாலியல் புகார் காரணமா?

ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் டிம் பெயின் தன்னுடைய பதவியை திடீரென்று ராஜினாமா செய்துள்ளார்

தன்னை நெகிழ வைத்த ரசிகருக்குப் பிரபல நடிகர் கொடுத்த அன்பு பரிசு!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து தற்போது உலக அளவில் அதிக ரசிகர்களை கொண்டிருக்கிற நடிகர் பிரபாஸ்

ஜப்பான் மாடலில் நவீன வசதி… அசத்தும் ரயில்வே நிர்வாகம்!

பயணிகள் ஓய்வெடுக்க கேப்ஸ்யூல் ஓட்டல் எனப்படும் சிறிய பாட் அறையை மும்பை ரயில்வே நிர்வாகம் வடிவமைத்துள்ளது.