பாடகாராகிவிட்டார் நடிகர் கார்த்தி: செம வீடியோ வைரல்!

  • IndiaGlitz, [Friday,August 26 2022]

தமிழ் திரை உலகில் உள்ள பல நடிகர்கள் பாடல்கள் பாடி பாடகர் ஆகியுள்ள நிலையில் அந்த பட்டியலில் தற்போது நடிகர் கார்த்தியும் இணைந்துள்ளார்.

ட்ரீம் வாரியர்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், அமலா முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் ’கணம்’. இந்த படம் தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பாடல் ஒன்று சற்று முன் வெளியாகியுள்ள நிலையில் இந்த பாடலை நடிகர் கார்த்தி பாடியுள்ளார். இந்த பாடலின் வீடியோவை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் வெளியிட்ட நிலையில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

அறிமுக இயக்குநர் ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள ’கணம்’ படத்தில் அமலா, சர்வானாந்த், நாசர், ரீத்து வர்மா, சதீஷ், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.