முதல்வருடன் நடிகர் கார்த்தி சந்திப்பு
- IndiaGlitz, [Thursday,August 16 2018]
கடந்த சில நாட்களாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு சுமார் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் ஆயிரக்கணக்கான கோடி அளவில் பொருட்சேதமும் ஏற்பட்டு அம்மாநிலமே நிலைகுலைந்து போயுள்ளது.
இந்த நிலையில் கோலிவுட் திரையுலகினர்களில் முதன்முதலாக சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் கேரள வெள்ள நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் தருவதாக அறிவித்தனர். அந்த வகையில் இந்த தொகையை இன்று கேரள முதலமைச்சரிடம் கார்த்தி நேரில் வழங்கினார்.
திருவனந்தபுரத்தில் இன்று கேரள முதல்வரை நேரில் சந்தித்த கார்த்தி, சூர்யாவின் சார்பிலும் தனது சார்பிலும் ரூ.25 லட்ச காசோலையை வழங்கினார். இந்த சந்திப்பின்போது 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ ராஜசேகர பாண்டியனும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.