முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொண்ட நடிகர் கார்த்தி: வைரல் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி வருவதை அடுத்து பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மத்திய மாநில சுகாதாரத்துறை அமைச்சகங்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. அதேபோல் திரையுலக பிரபலங்கள் பலர் தடுப்பூசி போட்டுக் கொண்டு, அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து, தங்களது ரசிகர்களுக்கு தடுப்பூசியின் அவசியத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பலர் தாங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர் என்பது தெரிந்ததே
அந்த வகையில் சற்று முன் நடிகர் கார்த்தி தனது சமூக வலைதளத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டதன் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். ‘நான் எனது முதல் டோஸ் தடுப்பு ஊசியை எடுத்துக் கொண்டேன்’ என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது
நடிகர் கார்த்தி நடித்த ‘சுல்தான்’சமீபத்தில் ரிலீஸான நிலையில் தற்போது அவர் ‘சர்தார்’ மற்றும் ’பொன்னியின் செல்வன்’ படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த இரண்டு படங்களின் அடுத்தகட்ட படப்பிடிப்புகள் லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Took my first dose of vaccine. #CovidVaccine pic.twitter.com/eqLzqWAvol
— Actor Karthi (@Karthi_Offl) June 11, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com