கொரோனா குறித்த சந்தேகங்கள்: நடிகர் கார்த்தியின் கேள்விகளும் டாக்டரின் பதில்களும்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து கொரோனா வைரஸ் குறித்து மக்களுக்கும் எழும் சந்தேகங்கள் குறித்து நடிகர் கார்த்தி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் தலைவர் டாக்டர் தேரணிராஜன் அவர்களிடம் கேள்விகள் கேட்ட வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்த கொரோனா விழிப்புணர்வு குறித்த இந்த நிகழ்ச்சியின்போது கார்த்தி கேட்ட கேள்விகளும் டாக்டரின் பதில்களும் பின்வருமாறு
கேள்வி: கொரோனா 2வது அலை மிக வேகமா பரவி வருது, அறிகுறி எதாவத மாறி இருக்கா?
பதில்: கொரோனா 2வது அலையில், கடுமையான காய்ச்சல் ஏற்படுகிறது, அதி தீவிர தலைவலி மேலும், வயிற்றுப்போக்கு ஏற்படுகின்றன. மேலும் அனைத்து வயதினரையும் இது பாதித்து வருகிறது. கேள்வி: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கட்டாயம் சிடி ஸ்கேன் எடுக்கனும்னு சொல்றாங்க அது கட்டயமா? பதில்: நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு மூச்சுவிடுவதில் சிரமம், நிமோனியவால் பாதிக்கப்பட்டுவிட்டார் என்றால் மட்டுமே மருத்துவரின் ஆலோசனைப்படி சிடி ஸ்கேன் எடுக்க வேண்டும். தேவையின்றி எடுப்பதால் தேவையில்லாத பதற்றம்,பயம் ஏற்படுகிறது இதை தவிர்க்க வேண்டும்.
கேள்வி : கோவாக்ஸின், கோவிட்ஷீல்டு இதில் எது சிறந்த தடுப்பூசி?
பதில் : இரண்டு தடுப்பூசியுமே பாதுகாப்பான தடுப்பூசிதான்,தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டால், தீவிரத்தன்மைக்கு போவதில்லை, மரணம் ஏற்படுவது இல்லை. அவர் அவருக்கு என்ன தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமோ அதை போட்டுக்கொள்ளுங்கள்.
கேள்வி: தடுப்பூசிப் போட்டுக்கொள்வதற்கு முன்பாகவும் போட்டுக்கொண்டதற்கு பின்பும் எந்தமாதிரியான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்?
பதில் : தடுப்பூசி போட்டுக்கொள்ளும் போது ஆல்கஹால் எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்கின்றனர். தடுப்பூசி எடுத்துக்கொள்வதற்கு ஒரு நாளுக்கு முன்பாகவும் , போட்டுக்கொண்டதற்கு பிறகு இரண்டு நாட்களுக்கு ஆல்கஹால் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது நல்ல என்று மருத்துவர் தேரணிராஜன் பதிலளித்தார்.
"நடிகர் கார்த்தியுடன்" மக்களின் கோவிட் பற்றிய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மதராஸ் மருத்துவ கல்லூரி & ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் தலைவர் "Dr. E.தேரணிராஜன்" அவர்கள் பதிலளிக்கிறார்.@Karthi_Offl#Covid19Chennai#GCC #Chennai https://t.co/cgBFklL8zB
— Greater Chennai Corporation (@chennaicorp) May 13, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments