ஒரு சின்ன தீப்பொறி போதும், மொத்தமும் அழிந்துவிடும்: வைரலாகும் கார்த்தி வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொடைக்கானல் மலையில் கடந்த சில நாட்களாக காட்டு தீ கொழுந்து விட்டு எரிந்து வரும் நிலையில் அங்கு உள்ள அபூர்வமான மூலிகைகள் மற்றும் மரங்கள் தீயில் கருகி வருகின்றன. அது மட்டுமின்றி ஏராளமான பறவைகள் மற்றும் விலங்குகள் காட்டு தீயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் காட்டுத்தீயை அணைக்க வனத்துறை மற்றும் தீயணைப்பு துறை தீவிர முயற்சி எடுத்து வரும் நிலையில் காட்டுத்தீயை தவிர்க்கவும் அதை கட்டுப்படுத்துவதற்கும் மக்கள் வனத்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென நடிகர் கார்த்தி கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வீடியோவில் கூறியிருப்பதாவது:
கோடை வெயிலுக்கு இதமளிக்கும் இயற்கை வளங்கள் தான் காடுகள். குழந்தைகள் முதல் பெரியவர் வரை எல்லோருக்கும் ஒரு கனவு பிரதேசம்தான் காட்டு பகுதி. பறவைகள் தாவரங்கள் ஆகியவை வாழும் அந்த பகுதியை காப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். எளிதாக தீப்பற்றிக்கொள்ளும் பொருள்களை எடுத்து செல்லும்போது ஒரு சின்ன தீப்பொறி பட்டால் கூட காடுகளுடன் சேர்ந்து மரங்கள் பறவைகளும் அழிந்துபோகும் அபாயம் உள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் ரொம்ப கவனமாக இருக்கவேண்டும். காட்டுத்தீக்கு எதிரான இந்த போரில் வனத்துறையுடன் இணைந்து நாமும் காடுகளை காப்போம்’ என்று கூறியுள்ளார் .
“காட்டுத்தீயைத் தவிர்க்கவும் அதை கட்டுப்படுத்துவதற்கும் மக்கள் வனத்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” - நடிகர் கார்த்தி காணொலி வாயிலாக விழிப்புணர்வு!#SunNews | #ForestFires | #Kodaikanal | @Karthi_Offl pic.twitter.com/pnKnzyr8Wk
— Sun News (@sunnewstamil) March 13, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments