பிறந்த நாளில் ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்த நடிகர் கார்த்தி
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் கார்த்தி ஒரு சிறந்த நடிகர் மட்டுமின்றி சமூக அக்கறையுடையவர் என்பது பல நேரங்களில் தெரிய வந்துள்ளது. நடிகர், நடிகர் சங்க பொருளாளர் பணிகளுக்கு இடையே அவர் செய்து வரும் சமூக சேவைகள் பாராட்டப்படும் வகையில் உள்ளது
இந்த நிலையில் இன்று அதாவது மே 25ஆம் தேதி கார்த்தியின் பிறந்த நாள் ஆகும். அவருக்கு திரையுலக நண்பர்களும், ரசிகர்களும் பிறந்த நாள் வாழ்த்துக்களை இன்று காலை முதல் தெரிவித்து வரும் நிலையில் தனது ரசிகர்களுக்கு அவர் ஒரு அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்றைய எனது பிறந்த நாளை ஒரு கொண்டாட்டமாக ரசிகர்கள் கொண்டாட வேண்டாம். தூத்துகுடியில் ஸ்டெர்லைட் போராட்டதின்போது 13 பேர்களின் உயிர்கள் பலியான நிலையில் தமிழகமே துக்கத்தில் இருக்கும்போது எனக்காக பிறந்த நாள் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்ய வேண்டாம் என்று ரசிகர்களை கேட்டு கொள்கிறேன். தமிழகத்தில் உள்ள தமிழர்கள் மட்டுமின்றி உலகில் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் இதுவொரு துக்க சம்பவம் ஆகும் என்று கூறியுள்ளார்.
தூத்துகுடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து சமீபத்தில் கார்த்தி தனது ஆவேசமான கருத்துக்களை ஒரு நீண்ட அறிக்கை மூலம் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout