நடிகர் கார்த்தியின் ஃபேஸ்புக் பக்கத்திற்கு வந்த திடீர் சிக்கல்.. ரசிகர்கள் அதிர்ச்சி
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் கார்த்தியின் பேஸ்புக் பக்கத்திற்கு திடீரென ஏற்பட்ட சிக்கலால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி என்பதும் அவரது நடிப்பில் உருவான ’விருமன்’ ’பொன்னியின் செல்வன்’ மற்றும் ’சர்தார்’ ஆகிய மூன்று திரைப்படங்கள் தொடர் வெற்றி பெற்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது நடிகர் கார்த்தி, ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகிவரும் ’ஜப்பான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அவரது படங்கள் குறித்த தகவல்களை அவர் தனது பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் சற்று முன் நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது பேஸ்புக் பக்கம் திடீரென ஹேக் செய்யப்பட்டிருப்பதாகவும் அந்த பக்கத்தை மீட்கும் நடவடிக்கையில் அவரது குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நடிகர் கார்த்தியின் பேஸ்புக் பக்கத்தை அவரது லட்சக்கணக்கான ரசிகர்கள் ஃபாலோ செய்து வரும் நிலையில் திடீரென அந்த பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில மாதங்களாகவே பிரபலங்களின் சமூக வலைதள பக்கங்கள் அவ்வப்போது ஹேக்கிங் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது கார்த்தியின் பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Hello guys, my Facebook page has been hacked. We are trying to restore it with Fb team.
— Karthi (@Karthi_Offl) November 14, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments