'மரம்' கருணாநிதிக்கு நிதியுதவி வழங்கிய நடிகர் கார்த்தி
Send us your feedback to audioarticles@vaarta.com
சுமார் ஐந்து லட்சத்திற்கும் மேல் மரங்கள் நட்டு தனது பெயருக்கு முன்னால் 'மரம்' என்ற அடைமொழியை பெற்றுள்ள 55 வயது கருணாநிதி என்பவரை அவரது சேவையை பாராட்டி நடிகர் கார்த்தி ரூ.50 ஆயிரம் நிதியுதவி செய்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் பேரூராட்சி சங்கீதமங்கலம் என்ற கிராமத்தில் பிறந்தவர் கருணாநிதி. சிறு வயதில் இருந்தே மரங்களின் மீதும் இயற்கையின் மீது பேரன்பு கொண்ட இவருக்கு சிறுவயதில் பசுமை போர்த்திய ஊராக இருந்த தன் ஊர் எல்லாம் மாறி மரங்களே இல்லாத சூழ்நிலை இருக்கிறதே என்று மனம் வெறுப்பினார். ஏன் நாம் மரக்கன்றுகளை போகும் இடங்கள் எல்லாம் நடக்கூடாது என்று யோசித்தவர்தான். இன்று 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளார். ஆதலால் இவர் பெயரோடு "மரம்" என்ற சொல்லும் இணைந்து மரம் கருணாநிதி என்றே அழைக்கப்படுகிறார்.
55 வயதான மரம் கருணாநிதிக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். எப்போதும் இயற்கையை பற்றிதான் கவலை. எங்கே சென்றாலும், யார் வீட்டுக்கு சென்றாலும் மரக்கன்றுகள் கொடுப்பது இவரது வழக்கம். இதுவரை இவர் மற்றவர்களுக்கு வழங்கிய மரக்கன்றுகளுக்கோ அல்லது இவரிடம் இருந்து மற்றவர்கள் வாங்கிச் சென்ற மரக்கன்றுகளுக்கோ இவர் பணம் வாங்கியதில்லை. விசேஷ நாட்களில் வேலைக்கு செல்வது, தன்னுடைய சம்பளத்தில் இருந்து மரக்கன்றுகள் வாங்குவது இப்படிதான் இவர் மரக்கன்றுகளை இலவசமாக அளித்தும், நட்டும் வருகிறார். அவர் இயற்கை மீது கொண்ட பற்றால் தன்னுடைய சம்பளத்தை செலவு செய்வதால் பல நேரங்களில் பொருளாதார நெருக்கடியும் ஏற்படுகிறது. ஆனால் எந்த நிலை என்றாலும் மரக்கன்றுகள் வழங்குவதையும் நடுவதையும் இவர் கைவிடுவதேயில்லை.
இவரது சேவையை பாராட்டியும் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டும் உழவன் பவுண்டேசன் சார்பில் அதன் நிறுவனர் நடிகர் கார்த்தி ரூபாய் 50 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கி கெளரவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments