சாண்டி மாஸ்டர் மீது திடீரென புகார் கூறிய கார்த்தி!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் மீது நடிகர் கார்த்தி திடீரென புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில், முத்தையா இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையில், சூர்யா தயாரிப்பில் உருவான திரைப்படம் ’விருமன்’. இந்த படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த வாரம் ’திருச்சிற்றம்பலம்’ உள்பட ஒருசில படங்கள் ரிலீஸான போதிலும் ’விருமன்’ படத்தின் வசூல் குறையவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படம் இதுவரை ரூ.35 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நடிகர் கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் சாண்டி மாஸ்டரை மன்னிக்க மாட்டேன் என புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடுராத்திரி மூன்று மணிக்கெல்லாம் சாண்டி மாஸ்டர் என்னை சம்மர் சால்ட் அடிக்க வைத்தாயே, உன்னை மன்னிக்கவே மாட்டேன். ஆனால் இதற்கு முன் இந்த மாதிரி சாகசங்கள் நான் செய்ததே இல்லை, இனி எல்லா ஊர் திருவிழாவிலும் நம்ம பாட்டு மட்டும்தான் கண்டிப்பாக இருக்கும், யுவனின் வெறித்தனம்’ என்று பதிவு செய்துள்ளார்.
‘விருமன்’ படத்தில் இடம்பெற்ற ’வானம் கிடுகிடுங்க’ என்ற பாடலில் கார்த்தியை சம்மர் சால்ட் அடிக்க வைத்த சாண்டி மாஸ்டர் குறித்த இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
நடுராத்திரி மூணு மணிக்கெல்லாம் சம்மர்சால்ட் அடிக்கவுட்டியே @iamSandy_Off master, மன்னிக்கவேமாட்டேன். Never done these acrobats before ??
— Actor Karthi (@Karthi_Offl) August 18, 2022
இனி எல்லா ஊர் திருவிழாலயும் நம்ம பாட்டு கண்டிப்பா இருக்கும் @thisisysr ??https://t.co/TmZ3COwPPl#வானம்_கிடுகிடுங்க video song.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments