சென்னை காவல்துறை ஆணையருடன் கருணாகரன் சந்திப்பு! புகார் அளித்தாரா?
Send us your feedback to audioarticles@vaarta.com
'சர்கார்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் ஒரு பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் பேசியிருப்பார். இந்த பேச்சு சில நாட்களாக தமிழக அரசியலில் புயலை கிளப்பியது. விஜய்யின் பேச்சை விமர்சனம் செய்யாத அரசியல்வாதிகளே இல்லை எனலாம். மேலும் செய்தி தொலைக்காட்சிகள் இதுகுறித்து இரண்டு நாட்கள் விவாதம் செய்தன. இந்த பரபரப்பு ஓய்வதற்குள் விஜய் கூறிய குட்டிக்கதை குறித்து காமெடி நடிகர் கருணாகரன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் விமர்சனம் செய்தார். இந்த விமர்சனத்திற்கு விஜய் ரசிகர்கள் என்று கூறப்படும் சில நெட்டிசன்கள் கடுமையான சொற்களால் பதிலடி கொடுத்தனர்.
இந்த நிலையில் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாகவும் இதுகுறித்து காவல்துணை ஆணையரை சந்தித்து புகாரளிக்க உள்ளதாகவும் கருணாகரன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார் என்பதை இன்று காலை பார்த்தோம்.
இந்த நிலையில் சற்றுமுன் காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் அவர்களை நேரில் சந்தித்த நடிகர் கருணாகரன் தனக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை மிரட்டல் குறித்து புகார் அளிப்பது தொடர்பான நடைமுறைகளை கேட்டறிந்ததாகவும், இதனையடுத்து இன்னும் இரண்டு நாட்களில் அவர் புகார் அளிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout