மத்திய அரசு மக்களின் மீது நிகழ்த்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் இது: கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Monday,February 15 2021]

கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை இந்தியா முழுவதும் உயர்ந்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் ரூ.90க்கு மேலும், வட மாநிலங்களில் ரூ.100ஐயும் தாண்டி பெட்ரோல் விலை விற்பனையாகி வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துகொண்டே வருகிறது. இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடும் பாதிப்பு உள்ளனர்.

இந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வின் அதிர்ச்சியிலிருந்து பொதுமக்கள் இன்னும் மீளாத நிலையில், தற்போது சமையல் காஸ் சிலிண்டர் விலையும் ரூபாய் 50 உயர்ந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே சமீபத்தில் ரூபாய் 25 சமையல் கேஸ் விலை உயர்ந்துள்ள நிலையில் தற்போது மேலும் ரூ.50 உயர்ந்துள்ளதல் மொத்தத்தில் சமையல் காஸ் சிலிண்டர் விலை தற்போது ரூ.785ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு மக்களின் மீது நிகழ்த்தும் சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்று கமல்ஹாசன் தனது டுவிட்டரில் சாடியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: பெட்ரோல், டீசல் விலை அன்றாடம் உயர்ந்துகொண்டே இருக்கிறது, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் ஒரே மாதத்தில் ரூ.75/-உயர்ந்துள்ளது. மத்திய அரசு மக்களின் மீது நிகழ்த்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் இது. இந்த அக்கறையற்ற போக்கினால் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயர்ந்து ஏழ்மை அதிகரிக்கும்.