நடிகர் காளிதாஸ் ஜெயராம் திருமணம்.. தமிழ்நாட்டின் ஜமீன் வீட்டு பெண் தான் மணமகளா?

  • IndiaGlitz, [Sunday,December 08 2024]

பிரபல நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் ஜெயராம் திருமணம் இன்று நடைபெற்ற நிலையில், அவரை திருமணம் செய்து கொண்டவர் தமிழ்நாட்டின் ஜமீன் வீட்டு பெண் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’, தனுஷ் நடித்த ’ராயன்’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும், பல மலையாள படங்களிலும் நடித்து வருபவர் நடிகர் காளிதாஸ் ஜெயராம்.

இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி தாரணி காளிங்கராயர் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், தற்போது இரு வீட்டார் சமாதானத்துடன் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. கேரளாவில் உள்ள புகழ்பெற்ற குருவாயூர் கோவிலில் இந்த திருமணம் நடந்த நிலையில், திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக தெரிகிறது. மேலும், திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

காளிதாஸ் மனைவி தாரணி காளிங்கராயர், ஊத்துக்குளி ஜமீன் வாரிசு என்று கூறப்படுவதை அடுத்து, ஜமீன் வீட்டு மாப்பிள்ளையாக காளிதாஸ் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் எளிமையாக நடந்தாலும், மிகவும் பிரமாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதில் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

More News

இது ஒரு கெட்ட கனவாக இருக்க கூடாதா? ராஷ்மிகா, சமந்தாவை அடுத்து பாதிக்கப்பட்ட இன்னொரு நடிகை..

தற்போதைய நவீன டெக்னாலஜியில் ஒருவரை போலவே இன்னொருவரை ஆபாச வீடியோவாக மாற்றி டிரெண்டாக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது, குறிப்பாக டீப்பேக் என்ற செயலி

பிக்பாஸ் எவிக்சனில் திடீர் திருப்பம்.. இந்த வாரம் ஒன்றல்ல 2 போட்டியாளர்கள்..!

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு வாரமும் வார இறுதியில் ஒரு போட்டியாளர் எலிமினேஷன் செய்யப்பட்டு வருகிறார்

இப்பதான் லவ் மூட் ஸ்டார் ஆச்சு, அதற்குள் எலிமினேஷனா? இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர்..!

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறு விஜய் சேதுபதி எபிசோடு என்பதால் கூடுதல் விறுவிறுப்பாக இருக்கும்.

அந்த அறிவு கூட இல்லையா அந்த ஆளுக்கு? துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி..!

நேற்று நடைபெற்ற அம்பேத்கர் புத்தக விழாவில் மன்னராட்சி குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் அர்ஜுனா பேசியதற்கு, "அந்த அறிவு கூட இல்லையா அந்த ஆளுக்கு?"

இரண்டே நாளில் 'புஷ்பா' படத்தின் லைஃப் டைம் வசூல்.. 'புஷ்பா 2' செய்த சாதனை..!

அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா' திரைப்படம் கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், அந்த வசூலை இரண்டே நாட்களில் 'புஷ்பா 2' திரைப்படம் செய்திருப்பதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.