விஜய்சேதுபதியின் 'லாபம்' படத்தில் இணைந்த இளம் ஹீரோ
- IndiaGlitz, [Wednesday,September 04 2019]
நடிகர் விஜய் சேதுபதி ஒரே நேரத்தில் சுமார் எட்டு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று 'லாபம்'. இயக்குனர் எஸ்பி ஜனநாதன் இயக்கிவரும் இப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார்
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் கோலிவுட்டின் இளம் ஹீரோ கலையரசன் இணைந்துள்ளார். கலையரசன் இந்த இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் ஏற்றிருப்பதாகவும், அவருக்கு இந்த படம் நல்ல பெயரை பெற்று தரும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்
டி இமான் இசையில், ராம்தேவ் ஒளிப்பதிவில், அந்தோணி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தை விஜய்சேதுபதி மற்றும் ஆறுமுககுமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படம் அடுத்தாண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது