'பத்து தல' படத்தில் இணைந்த மூன்றாவது ஹீரோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்புவின் ’ஈஸ்வரன்’ திரைப்படம் நாளை வெளியாகவிருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படத்தின் டைட்டில் ’பத்து தல’ என்றும் இந்தப் படம் கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான ’முஃப்தி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்றும் சமீபத்தில் அறிவிப்புகள் வெளிவந்தது தெரிந்ததே.
கிருஷ்ணா என்பவர் இயக்க உள்ள இந்த படத்தில் சிம்புவுடன், கௌதம் கார்த்திக் ஆகிய இரண்டு ஹீரோக்கள் நடிக்கவுள்ள நிலையில் தற்போது மூன்றாவதாக இன்னொரு ஹீரோ இந்த படத்தில் இணைந்துள்ள தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி என்ற படத்தில் அறிமுகமாகி அதன்பின் ‘மெட்ராஸ்’,கபாலி, அதே கண்கள், காலக்கூத்து உள்ளிட்ட பல திரைப்படங்களில் நாயகனாகவும் முக்கிய கேரக்டர்களிலும் நடித்த கலையரசன் தற்போது ‘பத்து தல’ படத்தில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் இந்த படத்தில் ‘அமீர்’ என்ற கேரக்டரில் நடிக்கவுள்ளார்.
ஏற்கன்வே ’பத்து தல’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிகை பிரியாபவானிசங்கர் நடிக்கவுள்ளார் என்றும், அசுரன்’ படத்தில் வேல்முருகன் என்ற கேரக்டரில் நடித்த தீஜே அருணாச்சலம் நடிக்கவுள்ளார் என்றும் செய்தி வெளியான நிலையில் தற்போது கலையரசனும் இந்த படத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Welcoming darling @KalaiActor as #Ameer on board for #PathuThala. Watch out for more update #PathuThala@kegvraja @NehaGnanavel @nameis_krishna @SilambarasanTR_ @Gautham_Karthik @priya_Bshankar @poetmanush @Iamteejaymelody @DoneChannel1 pic.twitter.com/18SEtTLhSF
— Studio Green (@StudioGreen2) January 13, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com