'பத்து தல' படத்தில் இணைந்த மூன்றாவது ஹீரோ!

  • IndiaGlitz, [Wednesday,January 13 2021]

சிம்புவின் ’ஈஸ்வரன்’ திரைப்படம் நாளை வெளியாகவிருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படத்தின் டைட்டில் ’பத்து தல’ என்றும் இந்தப் படம் கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான ’முஃப்தி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்றும் சமீபத்தில் அறிவிப்புகள் வெளிவந்தது தெரிந்ததே.

கிருஷ்ணா என்பவர் இயக்க உள்ள இந்த படத்தில் சிம்புவுடன், கௌதம் கார்த்திக் ஆகிய இரண்டு ஹீரோக்கள் நடிக்கவுள்ள நிலையில் தற்போது மூன்றாவதாக இன்னொரு ஹீரோ இந்த படத்தில் இணைந்துள்ள தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி என்ற படத்தில் அறிமுகமாகி அதன்பின் ‘மெட்ராஸ்’,கபாலி, அதே கண்கள், காலக்கூத்து உள்ளிட்ட பல திரைப்படங்களில் நாயகனாகவும் முக்கிய கேரக்டர்களிலும் நடித்த கலையரசன் தற்போது ‘பத்து தல’ படத்தில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் இந்த படத்தில் ‘அமீர்’ என்ற கேரக்டரில் நடிக்கவுள்ளார்.

ஏற்கன்வே ’பத்து தல’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிகை பிரியாபவானிசங்கர் நடிக்கவுள்ளார் என்றும், அசுரன்’ படத்தில் வேல்முருகன் என்ற கேரக்டரில் நடித்த தீஜே அருணாச்சலம் நடிக்கவுள்ளார் என்றும் செய்தி வெளியான நிலையில் தற்போது கலையரசனும் இந்த படத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

கணவனுக்கு நாயைப்போல சங்கிலி மாட்டி நடுரோட்டில் வாக்கிங் சென்ற பெண்… வைரல் வீடியோ!!!

கொரோனா நேரத்தில் விசித்திரத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டது. அப்படி ஒரு சம்பவம் கனடாவில் நடைபெற்று இருக்கிறது

சுரேஷ் பதிவு செய்த மர்மமான டுவீட்: என்ன நடக்குது பிக்பாஸ் வீட்டில்?

பிக்பாஸ் வீட்டில் திங்கள்கிழமை முதல் எவிக்சன் செய்யப்பட்ட போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினராக வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

ஃபைனலுக்கு செல்லும் முன் பணத்துடன் வெளியேறும் போட்டியாளர் யார்? பரபரப்பு தகவல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் கடைசி நேரத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கிக் கொண்டு போட்டியிலிருந்து விலக ஹவுஸ்மேட்ஸ்களுக்கு ஒரு வாய்ப்பை பிக்பாஸ் வழங்குவார்.

'மாஸ்டர்' படம் பார்த்துவிட்டு மரக்கன்றுகளை வாங்கி வந்த ரசிகர்கள்!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை

தண்டனை முடிந்து விடுதலையாகும் சசிகலா சென்னைக்கு வராமல் ஒசூரில் தங்குகிறாரா? என்ன காரணம்???

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா 4 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்து விட்டு வரும் ஜனவரி 24 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மேல் விடுதலை ஆகிறார்