மூன்றரை கோடி ரூபாய் காருக்கு கூடுதலாக ரூ.17 லட்சம் செலவு செய்த பிரபல நடிகர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
மூன்றரை கோடி ரூபாய்க்கு ஆடம்பர கார் வாங்கிய பிரபல நடிகர் ஒருவர் அந்த காருக்கு ஃபேன்சி நம்பர் வாங்க வேண்டும் என்பதற்காக கூடுதலாக 17 லட்ச ரூபாய் செலவு செய்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜூனியர் என்டிஆர் என்பதும் இவர் தற்போது எஸ்எஸ் ராஜமவுலி இயக்கி வரும் என்ற ‘ஆர்.ஆர்.ஆர். என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் ஜூனியர் என்டிஆர், லம்போர்கினி உருஸ் கிராபைட் காப்ஸ்யூல்’ என்ற ஆடம்பர காரை வாங்கியுள்ளார். இந்த காரின் விலை 3.5 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த காருக்கு பேன்சி நம்பர் வாங்குவதற்காக மட்டும் அவர் ரூ.17 லட்சம் செலவு செய்து உள்ளாராம். அதற்காக நடந்த ஏலத்தில் TS09 9999 என்ற எண்ணை வாங்குவதற்கு அவர் 17 லட்ச ரூபாய் கொடுத்துள்ளதாக தெரிகிறது.
எண் கணிதத்தின் மீது மிகுந்த நம்பிக்கை உள்ள ஜூனியர் என்டிஆர், இதே நம்பரை தான் தனது டுவிட்டர் பக்கத்தில் பயன்படுத்தி வருகிறார் என்பதும் அது மட்டுமின்றி அவரது குடும்பத்தினர் வைத்துள்ள அனைத்து காரர்களுக்கும் 9999 என்ற நம்பர் தான் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவேதான் ஜூனியர் என்.டி.ஆர் தனது புதிய காருக்கும் அதே நம்பரை வாங்குவதற்கு 17 லட்ச ரூபாய் செலவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
17 லட்ச ரூபாயில் இந்திய தயாரிப்பில் ஒரு புதிய காரை வாங்கி விடலாம் என்ற நிலையில் ஜூனியர் என்டிஆர் தனது காரின் நம்பருக்காக அந்த தொகையை செலவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com