நடிகர் ஜான் விஜய் மனைவி பிரபல அரசியல்வாதியின் மகளா? க்யூட் குடும்ப புகைப்படங்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான ஜான் விஜய்யின் மனைவி பிரபல அரசியல்வாதியின் மகள் என்ற தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான சரத்குமார் நடித்த ’தலைமகன்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஜான் விஜய். அதன் பிறகு அவர் அஜித்தின் ’பில்லா’ ஜெயம் ரவியின் ’தில்லாலங்கடி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். கலந்த 2021 ஆம் ஆண்டு வெளியான ’சார்பட்டா பரம்பரை’ என்ற திரைப்படத்தில் அவர் நடித்த டாடி என்ற கேரக்டர் அவருக்கு மிகப்பெரிய புகழை பெற்று தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் ஜான்விஜய், மாதவி இளங்கோவன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் ஜான் விஜய் மனைவி மாதவி திமுக பிரமுகர் டி.கே.எஸ் இளங்கோவன் அவர்களின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஜான் விஜய்யின் குடும்ப புகைப்படம் இணையதளங்களில் வரும் நிலையில் அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout