விஜய்யின் 'புலி'க்கு பாராட்டு தெரிவித்த 'நண்பன்' ஜீவா
Send us your feedback to audioarticles@vaarta.com
இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் கடந்த 1ஆம் தேதி ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த படத்தில் விஜய் எடுத்துள்ள வித்தியாசமான முயற்சிக்கு இயக்குனர் லிங்குசாமி பாராட்டு தெரிவித்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் விஜய்யின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரும், விஜய்யுடன் 'நண்பன்' படத்தில் நடித்தவருமான ஜீவா, புலி படம் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
'புலி' திரைப்படம் குழந்தைகளுக்கான ஒரு அழகான படம். அதிகளவிலான கிராபிக்ஸ் காட்சிகளுடன் அனைத்து தரப்பு ஆடியன்ஸ்களும் ரசிக்கும் வகையில் உள்ள ஒரு ஃபேண்டஸி திரைப்படம். ரியாலிட்டியுடன் தொடர்பு கொள்ளாமல் வேறொரு உலகத்திற்கு படக்குழுவினர் நம்மை அழைத்து சென்றுள்ளனர். விஜய் தன்னுடைய ரசிகர்களுக்கு மட்டுமின்றி குழந்தைகள், குடும்ப ஆடியன்ஸ் என எல்லோருக்கும் சேர்த்து ஒரு ஜனரஞ்சகமான படத்தை முதன்முதலாக தந்துள்ளார்.
குழந்தைகளுக்காக ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று எனக்கு ரொம்ப நாளாக ஆசை இருந்தது. விஜய்யின் இந்த படம் வித்தியாசமான கெட்டப்பில், வித்தியாசமான கேரக்டர்களுடன் ரசிக்கும்படியாக உள்ளது. விஜய்யின் வழக்கமான டான்ஸ், சண்டைக்காட்சிகள் உள்பட அனைத்து அம்சங்களுடன் இருக்கும் படம்தான் 'புலி' என்று ஜீவா கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments