விஜய்யை அடுத்து கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய பிரபல நடிகர்

  • IndiaGlitz, [Tuesday,August 14 2018]

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவின்போது அமெரிக்காவில் 'சர்கார்' படப்பிடிப்பில் இருந்த தளபதி விஜய், அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பியதும் வீட்டிற்கு கூட செல்லாமல் விமான நிலையத்தில் இருந்து நேராக கருணாநிதி சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிலையில் விஜய்யை அடுத்து தற்போது நடிகர் ஜீவா கருணாநிதி சமாதிக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

ஏற்கனவே கருணாநிதி மறைந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி நடிகர் ஜீவா தனது சமூகவலைத்தளத்தில் கருணாநிதி மறைவு குறித்து, 'மரணம் வாழ்க்கையில் ஓர் அங்கம் என்பதை சொல்லித்தந்தது உன் பகுத்தறிவு. பகுத்தறிவாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை உன் மரணத்தை. போய் வா தமிழே! என்று பதிவு செய்திருந்தார் என்பது குறிப்ப்பிடத்தக்கது.

More News

விஜய், அஜித் குறித்த ஸ்ரீரெட்டியின் கமெண்ட்

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கடந்த சில மாதங்களாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி தலைப்பு செய்திகளில் இடம்பெற்றவர் என்பது தெரிந்ததே

நடிகை ரம்பாவுக்கு  வளைகாப்பு திருவிழா

பிரபல நடிகை ரம்பாவுக்கும் கனடா தொழிலதிபர் இந்திரகுமாருக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஏற்கனவே லாவண்யா, சம்பா என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

'சுப்பிரமணியபுரம்' நடிகையின் திருமண தேதி அறிவிப்பு

சசிகுமார், ஜெய் நடிப்பில் சமுத்திரக்கனி இயக்கிய 'சுப்பிரமணியபுரம்' படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சுவாதி.

நயன்தாராவின் 'இமைக்கா நொடிகள்' ரன்னிங் டைம்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்த  'கோலமாவு கோகிலா' திரைப்படம் வரும் வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

முதல்முறையாக பிக்பாஸ் வீட்டில் அடிதடி

பிக்பாஸ் நிகழ்ச்சியை பிரபலப்படுத்த அதன் ஸ்கிரிப்ட் ரைட்டர்கள் மூளையை கசக்கி திரைக்கதை எழுதியும் இன்று வரை அதற்கு பலனில்லாமல் உள்ளது.