காதல் மனைவிக்கு கவிதை மூலம் பிறந்தநாள் வாழ்த்து கூறிய தமிழ் ஹீரோ!

  • IndiaGlitz, [Monday,September 21 2020]

தமிழ் ஹீரோ ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதல் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

’ஆசை ஆசையாய்’ என்ற படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ராம், டிஷ்யூம், ஈ, பொறி, நண்பன் உள்பட பல வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகர் ஜீவா. சமீபத்தில் அவர் நடித்த ’ஜிப்ஸி’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று அவருடைய மனைவி சுப்ரியாவின் பிறந்தநாளை அடுத்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஆங்கில கவிதை ஒன்றின் மூலம் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தன்னுடைய குழந்தைப் பருவ காதலிக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் கடினமான நேரங்களிலும் எளிதான நேரங்களிலும், உயர்வு தாழ்வு நேரங்களிலும், சண்டைகள் மற்றும் சந்தோஷ நேரங்களிலும் எனக்கு உறுதுணையாக இருந்த என் குழந்தைப் பருவ காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜீவா மற்றும் சுப்ரியா குழந்தை பருவம் முதல் நட்புடன் பழகி வந்தார்கள் என்பதும் இந்த நட்பு காதலாகியதை அடுத்து கடந்த 2007ஆம் ஆண்டு இந்தக் காதல் ஜோடிக்கு திருமணம் நடந்தது என்பதும் இந்த தம்பதிக்கு ஸ்பார்ஷா என்ற ஒரு மகன் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜீவா தற்போது ’காலத்தில் சந்திப்போம்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பதும் அடுத்ததாக அவர் பா விஜய் இயக்கத்தில் உருவாகிவரும் ’மேதாவி’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.