முதல்முறையாக மனைவியுடன் இருக்கும் புகைப்படம் வெளியிட்ட நடிகர் ஜீவா!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் ஜீவா முதல்முறையாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய மனைவியின் புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இது ரசிகர்களிடையே கவனம் ஈர்த்திருக்கிறது.
பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் மூத்த மகன் ஜீவா தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவருடைய தம்பிதான் நடிகர் ரமேஷ் சித்தன் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களைக் கொடுத்த இவர் சமீபத்தில் 1983 இல் இந்தியக் கிரிக்கெட் அணி உலகக்கோப்பை வென்றதை மையப்படுத்திய “83“ திரைப்படத்தில் நடித்திருந்தார்.
பான் இந்தியா திரைப்படமான இந்தப் படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜீவாவிற்கு பல தரப்புகளில் இருந்தும் பாராட்டுகள் குவிந்தன. இதையடுத்து தற்போது “கோல்மால்“, “ஜெமினி கணேசன்“, “வரலாறு முக்கியம்“ போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு நடிகர் ஜீவா தன்னுடைய மனைவி சுப்ரியாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துகொண்டு ரசிகர்களுக்கு காதலர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்தப் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments