நடிகர் ஜீவா குடும்பத்துடன் சென்ற கார் விபத்து.. என்ன ஆச்சு?

  • IndiaGlitz, [Wednesday,September 11 2024]

பிரபல தமிழ் நடிகர் ஜீவா தனது குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்தபோது அந்த கார் விபத்து உள்ளானதாக வெளியாகியிருக்கும் செய்தி கோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜீவா இன்று தனது குடும்பத்தினருடன் சேலத்தில் இருந்து சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் என்ற பகுதிக்கு அவருடைய கார் வந்தபோது திடீரென விபத்துக்குள்ளானது.

காரின் குறுக்கே இருசக்கர வாகனம் திடீரென வந்ததால் சாலையின் தடுப்புச் சுவரில் ஜீவா சென்ற கார் மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் ஜீவா உட்பட அவரது குடும்பத்தினருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாகவும் காரின் முன்பகுதி சேதம் அடைந்துள்ளதாகவும் தெரிகிறது.

இதனை அடுத்து ஜீவா தங்கள் குடும்பத்துடன் முதலுதவி சிகிச்சை எடுத்துக்கொண்டு அதன் பின் மீண்டும் சென்னை புறப்பட்டு சென்றதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது.

More News

எத்தனை முறை திருமணம் நடந்தது என்பதை நானே மறந்துவிட்டேன்: தனுஷ், சிம்பு பட நடிகை..!

ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் எனக்கு பலமுறை திருமணம் நடத்தி வைத்து விட்டன என்றும் எத்தனை முறை எனக்கு திருமணம் நடத்தி வைத்தார்கள் என்பதை நானே மறந்து  விட்டேன்

பாடகர் மனோவின் இரு மகன்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு.. என்ன காரணம்?

தமிழ் திரை உலகின் பிரபல பாடகர் மனோவின் இரண்டு மகன்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருவதாக கூறப்படுவது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மணிரத்னம் இயக்கிய 'உயிரே' பட நடிகையின் தந்தை தற்கொலை.. 6வது மாடியில் இருந்து குதித்தாரா?

மணிரத்னம்  இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவான 'உயிரே' திரைப்படத்தில் நடித்த நடிகையின் தந்தை மும்பையில் உள்ள அவரது வீட்டில் ஆறாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா.. முதல்முறையாக மாமியார் வீடு சென்ற பிரேம்ஜி.. வைரல் வீடியோ..!

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜி கடந்த ஜூன் மாதம் இந்து என்பவரை திருமணம் செய்த நிலையில் முதல் முறையாக தனது மாமியார் வீட்டுக்கு சென்ற வீடியோவை

ஒரே புகைப்படத்தில் இரண்டு லேடி சூப்பர் ஸ்டார்.. விக்னேஷ் சிவன் பகிர்ந்த புகைப்படம்..!

இயக்குனர் விக்னேஷ் சிவன் பகிர்ந்த புகைப்படத்தில் இரண்டு லேடி சூப்பர் ஸ்டார் நடிகைகள் இருக்கும் நிலைகள் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.