கடும் வெயில்: 50 காவல்துறையினர்களுக்கு கூலிங் கிளாஸ் கொடுத்த தமிழ் நடிகர்

  • IndiaGlitz, [Saturday,June 01 2019]

கடுமையான வெயிலில் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் காவல்துறையினர்கள் சுமார் 50 பேர்களுக்கு நடிகர் ஜெய்வந்த் கூலிங் கிளாஸ் வாங்கி கொடுத்துள்ளார்.

வெயில், மழை என பாராமல் மக்களின் பாதுகாப்புக்காக பணிபுரிந்து கொண்டிருப்பவர்கள் காவல்துறையினர்கள். குறிப்பாக போக்குவரத்து போலீசார்கள் கடும் வெயிலிலும் தங்களது பணியை கடமை தவறாது செய்து வருவதால்தான் டிராபிக் பிரச்சனையின்றி பயணம் செய்ய முடிகிறது.

இந்த நிலையில் போக்குவரத்து போலீசார்களுக்கு உதவிடும் வகையில் எழும்பூர் காவல்நிலையத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் 50 காவலர்களுக்கு நடிகர் ஜெய்வந்த் கூலிங்கிளாஸ் கண்ணாடிகளை வழங்கியுள்ளார். இதற்கு அனுமதி அளித்த காவல்துறையினர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

மத்திய சென்னை, காட்டுப்பய காளி ஆகிய படங்களில் நடித்துள்ள நடிகர் ஜெய்வந்த், தற்போது 'அசால்ட்' என்னும் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பா.ரஞ்சித் படத்திற்காக டப்பிங் பேசிய ரித்விகா!

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் வெற்றியாளரான ரித்விகா, பா.ரஞ்சித்தின் அடுத்த படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் தற்போது அந்த படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

நாடாளுமன்றத்திற்கு ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா? எம்பியான இளம் நடிகைகள் கேள்வி

குற்றப் பின்னணி கொண்டு ஊழல் கறை படிந்த எம்பிக்கள் எல்லாம் நாடாளுமன்றத்திற்கு வருவதை கேள்வி கேட்காதவர்கள், நாங்கள் அணிந்து வரும் உடைகள் குறித்து மட்டும் கேள்வி எழுப்புவது

அமலாபால் நடித்த அடுத்த படத்திற்கு 'ஏ' சான்றிதழ்!

நடிகை அமலாபால் கடந்த ஆண்டு நடித்த 'ராட்சசன்' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் தற்போது அவர் 'அதோ அந்த பறவை போல', 'ஆடை',  மற்றும் மூன்று மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

'தளபதி 64' படத்தில் த்ரிஷாவா? ராஷ்மிகாவா? படக்குழுவினர் விளக்கம்

தளபதி விஜய் நடித்து வரும் 63வது படமான 'தளபதி 63' படத்தை அடுத்து அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன.

தமிழ் நடிகைக்கு வழங்கப்பட்ட மிஸ் சவுத் இந்தியா பட்டம் திரும்ப பெறப்பட்டதால் பரபரப்பு

நடிகையும் கடந்த 2016ஆம் ஆண்டு மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்றவருமான மீரா மிதுன் சமீபத்தில் தான் சென்னையில் நடத்த திட்டமிட்டிருந்த அழகிப்போட்டியை தடுத்து நிறுத்த சிலர் திட்டமிடுவதாகவும்,