அருமையான பயணம் இது… சொந்த அண்ணனை வாழ்த்திய நடிகர் ஜெயம்ரவி!
Send us your feedback to audioarticles@vaarta.com
சினிமா உலகில் எடிட்டரும் தயாரிப்பாளருமாக வெற்றிகரமான பயணத்தை கொண்டிருந்தவர் மோகன். இவரது மூத்த மகன் மோகன் ராஜா ஒரு முன்னணி இயக்குநராக இருந்துவருகிறார். அதேபோல இளைய மகன் ஜெயம்ரவியும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.
இந்நிலையில் இயக்குநர் மோகன்ராஜாவை அவரது தம்பி ஜெயம்ரவி வாழ்த்தி பதிவிட்டு இருக்கும் ஒரு புகைப்படம் இணையத்தில் கவனம் பெற்றிருக்கிறது. அதாவது மோகன் ராஜா தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாவதற்கு முன்பே தெலுங்கில் ஒரு சில திரைப்படங்களுக்கு உதவிஇயக்குநராகப் பணியாற்றி உள்ளார்.
அப்படியொரு திரைப்படம்தான் நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான “ஹிட்லர்“. சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த இந்தத் திரைப்படத்தின் 100 ஆவது நாள் வெற்றிக்கொண்டாட்டத்தின்போது அதே படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிக் கொண்டிருந்த மோகன் ராஜா நடிகர் சிரஞ்சீவிக்கு மாலை அணிவிக்கிறார். இந்த நிகழ்வு 25 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றிருக்கிறது.
தற்போது அதே சூப்பர் ஸ்டார் நடிகர் தெலுங்கில் நடிக்கும் “காட்பாதர்“ திரைப்படத்தை இயக்குநர் மோகன் ராஜா இயக்கிவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் 25 வருடங்களுக்குமுன்பு மோகன் ராஜா, நடிகர் சிரஞ்சீவிக்கு மாலை அணிவிக்கும் புகைப்படத்தையும் தற்போது சிரஞ்சீவியுடன் இணைந்து பணியாற்றும் புகைப்படத்தையும் வெளியிட்ட ஜெயம் ரவி அவர்கள் “என்ன ஒரு அருமையான பயணம்“ என்று பதிவிட்டு இருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
What a journey Anna ?? https://t.co/hvKgG9fVx9
— Jayam Ravi (@actor_jayamravi) January 10, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Kiara Nithya
Contact at support@indiaglitz.com