ஜெயம் ரவி வீட்டில் என்ன விசேஷம்? ஒட்டுமொத்த குடும்பமே கூடியிருக்குது..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் ஜெயம் ரவி மகனின் 13 வது பிறந்த நாள் சமீபத்தில் கொண்டாடப்பட்ட நிலையில் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவரது ஒட்டுமொத்த குடும்பமே கூடி இருந்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி என்பதும் இவர் ’ஜெயம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அதன் பிறகு பல வெற்றி படங்களை தொடர்ச்சியாக தந்துள்ளார் என்பதும் தெரிந்ததே.
சமீபத்தில் வெளியான ’பொன்னியின் செல்வன்’ மற்றும் ’பொன்னியின் செல்வன் 2’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஜெயம் ரவிக்கு மிகப்பெரிய புகழை பெற்று தந்தது. தற்போது ’இறைவன்’ ’சைரன்’ உள்பட 4 படங்களில் ஜெயம் ரவி நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தி என்பவரை கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களில் ஆரவ் என்ற மகனுக்கு 13 வயது ஆனதை எடுத்து அவரது பிறந்த நாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது.
இதில் ஜெயம் ரவி ரவியின் குடும்பம், அவரது சகோதரர் ஜெயம் ராஜாவின் குடும்பம், மற்றும் ஜெயின் ரவியின் அம்மா அப்பா உட்பட ஒட்டுமொத்த குடும்பமும் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு ஆரவ்வுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments