உயிரிழந்த ரசிகரின் குடும்பத்திற்கு உறுதிமொழி கொடுத்த ஜெயம்ரவி!

  • IndiaGlitz, [Tuesday,June 14 2022]

ஜெயம் ரவியின் தீவிர ரசிகர் ஒருவர் சமீபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்திய ஜெயம் ரவி அவரது குடும்பத்திற்கு ஒரு உறுதிமொழி கொடுத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவர் ஜெயம்ரவி என்பதும் அவருக்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் உண்டு என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் ஜெயம்ரவியின் தீவிர ரசிகர் ஒருவர் சமீபத்தில் உயிரிழந்தார்.

இது குறித்த தகவல் அறிந்ததும் அந்த ரசிகரின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஜெயம் ரவி ஆறுதல் கூறினார். அதுமட்டுமின்றி உயிரிழந்த ரசிகரின் உடன்பிறந்தவர்களின் கல்விச் செலவு முழுவதையும் தான் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார். ஜெயம் ரவியின் இந்த உதவிக்கு திரையுலகினர் மட்டுமன்றி பொதுமக்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
 

More News

ஒரே நாளில் தனுஷ்-சிம்பு படங்கள் ரிலீசா?

தமிழ் திரையுலகை பொறுத்தவரை ஒரே நாளில் மாஸ் நடிகர்களின் திரைப்படங்கள் ரிலீஸ் ஆனால் அந்தந்த ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்பது தெரிந்ததே. ரஜினி - கமல், அஜித் - விஜய் ஆகியோரின்

கமல்ஹாசனை சந்தித்த 'குக் வித் கோமாளி' அஸ்வின்: என்ன காரணம் தெரியுமா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்த மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் 'விக்ரம்' வெற்றியை அடுத்து

சுந்தர் சியின் 'பட்டாம்பூச்சி' ரிலீஸ் தேதி: 9 படங்களுடன் ரிலீஸ் ஆகிறதா?

சுந்தர் சி நடித்த 'பட்டாம்பூச்சி' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. 

முதல்முறையாக அஜர்பைஜான் பாராளுமன்றத்தில் படப்பிடிப்பு: எந்த ஹீரோ படம் தெரியுமா?

ஒரு தமிழ் திரைப்படத்தின் படப்பிடிப்பில் முதல்முறையாக அஜர்பைஜான் பாராளுமன்றத்தில் நடைபெற இருப்பதாகவும் இந்த காட்சிக்காக மட்டும் 4 கோடி ரூபாய் படக்குழுவினர் செலவு செய்துள்ளதாகவும்

இன்று சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் டி.ராஜேந்தர்: அவருக்கு என்ன தான் பிரச்சனை?

நடிகரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான டி ராஜேந்தர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.