நீண்ட இடைவெளிக்கு பின்... டைட்டில் வின்னரை சந்தித்த நடிகர் ஜெய்!

  • IndiaGlitz, [Tuesday,January 04 2022]

நீண்ட இடைவேளைக்கு பின்னர் தன்னுடன் நடித்த நடிகையை சந்தித்துள்ளதாக புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை நடிகர் ஜெய் செய்துள்ள நிலையில் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’சென்னை 28’. இந்த படத்தின் இரண்டாம் பாகம் 2016ஆம் ஆண்டு வெளியானது என்பதும் நடிகர் ஜெய் முக்கிய வேடத்தில் நடித்த இந்த இரண்டு படங்களும் சூப்பர்ஹிட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’சென்னை 28’ முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தில் தன்னுடன் நடித்த நடிகை விஜயலட்சுமியை சமீபத்தில் நடிகர் ஜெய் சந்தித்துள்ளார். இது குறித்த செல்பி புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள ஜெய், நீண்ட இடைவேளைக்கு பிறகு சந்தித்தேன் என்றும் குறிப்பிட்டுள்ளதோடு, சர்வேயர் நிகழ்ச்சியின் வின்னர் என்றும் குறிப்பிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பாசிட்டிவ் கமெண்ட்ஸ்கள் மற்றும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.