குடிபோதையில் கார் ஓட்டிய வழக்கு: ஜெய்க்கு வழங்கப்பட்ட தண்டனை விபரம்

  • IndiaGlitz, [Saturday,October 07 2017]

நடிகர் ஜெய் கடந்த சில நாட்களுக்கு முன்னர் குடிபோதையில் கார் ஓட்டி அடையாறு அருகே விபத்து ஏற்படுத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஆனால் நேற்று நடிகர் ஜெய் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று நடிகர் ஜெய் நீதிமன்றத்தில் ஆஜரானார். இன்றைய விசாரணையின்போது நடிகர் ஜெய்க்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் நீதிபதி கண்டனங்கள் தெரிவித்திருந்ததை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. குடிபோதையில் கார் ஓட்டியதற்காக நடிகர் ஜெய்க்கு ரூ.5200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அவருடைய ஓட்டுனர் உரிமம் ஆறு மாதங்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. எனவே ஜெய் ஆறு மாதங்கள் இனி கார் ஓட்ட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

வாழ்க்கையை திரைப்படம் போல நினைத்தீர்களா? நடிகர் ஜெய்க்கு நீதிபதி சரமாரி கேள்வி

குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில், நடிகர் ஜெய் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகாததை அடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

திரையரங்குகள் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு அனுமதி: ரசிகர்கள் அதிருப்தி

திரைத்துறையினர்கள் ஜிஎஸ்டி வரி மட்டுமின்றி தமிழக அரசின் கேளிக்கை வரியும் கட்ட வேண்டிய நிலை இருப்பதை அடுத்து நேற்று முதல் புதிய திரைப்படங்கள் திரையிடப்படுவதில்லை

விஜய்யும் இல்லை, சூர்யாவும் இல்லை! பிரபல நடிகரை வளைக்கிறது பிக்பாஸ் 2 டீம்

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றி பெற்றதை அடுத்து இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது பாகத்தின் பணிகள் சுறுசுறுப்பாக நடந்து வருகிறாது.

ஜிஎஸ்டி வரியின் புதிய சலுகைகளை கிண்டல் செய்த அரவிந்தசாமி

நாடு முழுவதும் ஒரே வரி என்ற வரிவிதிப்பு முறை கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் ஜிஎஸ்டி வரியுடன் பெரும்பாலான மாநிலங்கள் தனியாக வரிவிதித்து வருகின்றன.

தளபதி விஜய்யின் 'மெர்சல்' ரிலீஸ் குறித்த முக்கிய தகவல்

தளபதி விஜய்யின் 'மெர்சல்' திரைப்படம் பலவித தடைகளை தகர்த்து வரும் தீபாவளி தினம் முதல் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.