close
Choose your channels

தாயார் இறந்த மூன்றே நாட்களில் காலமான பிரபல பாலிவுட் நடிகர்

Wednesday, April 29, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் நடிகர் இர்பான்கான் சற்றுமுன் காலமானதாக வெளிவந்துள்ள செய்தியால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவருக்கு வயது 54

பிரபல பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான், உடல்நலக் குறைவு காரணமாக மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்றுமுன் அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டது. இர்பான்கான் கடந்த சில மாதங்களாகவே புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் தான் ராஜஸ்தானில் அவரது தாய் காலமான நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக அவரது இறுதிச்சடங்கில் கூட இர்பான்கானால் கலந்து கொள்ள முடியவில்லை. இதனையடுத்து வீடியோ மூலம் தனது தாயின் இறுதிச்சடங்கை அவர் கண்ணீருடன் பார்த்தார். இந்த நிலையில் தாய் இறந்த மூன்றே நாட்களில் இர்பான்கான் மறைந்தது அவரது குடும்பத்தினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

பாலிவுட் படங்கள் மட்டுமின்றி ‘லைஃப் ஆஃப் பை, ஜூராஸிக் வேர்ல்ட் உள்ளிட்ட ஒருசில ஹாலிவுட் படங்களிலும் இர்ஃபான் கான் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment