நடிகர் இர்பான்கான்: வாழ்க்கைச் சித்திரம்!!!

  • IndiaGlitz, [Thursday,April 30 2020]

 

“ஸ்லம்டாக் மில்லியனர்”, “லைஃப் ஆஃப் பை” மற்றும் “தி அமேசிங் ஸைபைடர் மேன்” உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்த பாலிவுட் நடிகர் இர்பான்கான் 54 வயதில் நேற்று காலமானார். இச்செய்தி பாலிவுட் மட்டுமல்லாது அனைத்து மொழி திரையுலகினரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.

இவர் ஜனவரி 7, 1967 இல் ராஜன்தானில் பிறந்தார். ஆரமபக் கட்டத்திலேயே நடிப்பு மீது கொண்ட தீராதக் காதலால் நாடகப் பள்ளியில் தனது கல்வியைத் தொடங்கினார். அவர் கற்றுக்கொண்ட ஷேக்ஸ்பியர் மற்றும் செக்காவ் போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களின் நாடகங்கள் அவருக்கு இந்தித் திரையுலகில் கைக்கொடுக்கவில்லை. National Scholl of Drama வில் தனது பட்டப்படிப்பை முடித்தப்பின்பு, மும்பைக்கு சென்று தொலைக்காட்சிகளில் நடிக்கத் தொடங்கினார். இவர் திரைப்படத்தில் அறிமுகமாவதற்கு முன்னர் கிரிக்கெட்டிலும் தன் கவனத்தை செலுத்தியிருக்கிறார். பொருளாதார காரணங்களால் அதையும் தொடர முடியாமல் கடைசியில் நடிப்புத் தொழிலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.

ஆசிப் கபாடியா இயக்கிய ‘தி வாரியர்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த படம்தான் அவருக்கு ஒரு திருப்பு முனையாகவும் அமைந்தது. தி வாரியர் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் வலம் வந்தது. கூடவே இர்பான்கானும் பிரபலமானார். இதனால் மக்களை கவர்ந்த நடிகன் என்ற பெயரைப் பெறுவதற்கு அவருக்கு நீண்டகாலம் பிடிக்கவில்லை. 2005 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘ரோக்’ படத்தின் மூலம் பாலிவுட் திரையில் முன்னணி கதாபாத்திரமாக அறிமுகமானார். அவர் தேர்வு செய்த கதாபாத்திரங்கள் அனைத்தும் விறுவிறுப்பாகவோ அல்லது சிக்கலாகவோ தான் அமைந்திருக்கும். ‘தி நேம்சேக்’ படம் வெளிவந்த பின்பு ஹாலிவுட் படங்களிலும் அவர் திறமை பெற்ற நடிகராக மதிக்கப்பெற்றார்.

அவரது நடிப்பில் பலத்தரப்பட்ட கதாபாத்திரங்களை நம்மால் பார்க்க முடியும். ‘‘கார்வான்’’, ‘‘பிகு’’ ஆகியவற்றிற்குப் பிறகு “தி லஞ்ச் பாக்ஸ்’, “தி லைஃப் ஆஃப் பை” போன்ற படங்களில் மிகவும் மேம்பட்ட நடிகராகவே அவர் பரிணமித்திருக்கிறார். “தி டார்ஜிலிங்க் எக்ஸ்பிரஸ்” படத்தில் இர்பான்கானை நடிக்க வைப்பதற்காக வெஸ் ஆண்டர்சன் கதையின் பகுதிகளை மாற்றியும் அமைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2017 இல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “எங்களுக்கு சினிமா பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்றாலும், நாங்கள் ஒரு சில திரைப்படங்களைப் பார்ப்போம்... மேலும், படங்களை எடுத்து அதைச் சுற்றி ஒரு கதையை நெசவுசெய்கிறோம்... அது நம் மனதைக் கவரும்...” எனத் தனது திரை அனுபவத்தைக் குறித்து பதிவு செய்திருக்கிறார். கடைசியாக இந்தியல் 2017 மீடியம் என்ற படத்தில் அவர் நடித்தார் 2018 இல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது அவரது வாழ்க்கை ஒரு துருதிர்ஷ்டவசமான திருப்பத்திற்கு மாறியது. நடிப்புத் தொழிலை விட்டு சிகிச்சைக்காகத் தன் குடும்பத்துடன் லண்டனுக்கு சென்றார். Nuron VentralHorn என்ற அரிதான புற்றுநோயால் அவர் பாதிக்கப்பட்டார்.

கடந்த மார்ச் மாதத்தில் மும்பையில் Mirror பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தனது வாழ்க்கை குறித்து “ரோலர் –கோஸ்டர் சவாரிபோல் மறக்க முடியாத அனுபவமாக இருக்கிறது” என குறிப்பிட்டு இருந்தார். “நிச்சமற்ற தன் வாழ்க்கையில் மகிழ்ச்சியான சில தருணங்களை நினைத்துப் பார்த்ததாகவும், கொஞ்சம் அழுதோம், நிறைய சிரித்தோம்” எனவும் செய்தியாளர்களிடம் பேசியிருந்தார். நடிப்புக்காக பல விமர்சனக் கருத்துகளையும் எதிர்கொண்ட இர்பான்கான் தற்போது மொழி கடந்த அனைத்து ரசிகர்களாலும் வருத்தம் தெரிவிக்கப்படும் ஒருவராக மாறியிருக்கிறார்.

More News

காய்கறி வாங்க சென்ற இளைஞர் மனைவியுடன் வந்ததால் அதிர்ச்சி அடைந்த அம்மா!

காய்கறி வாங்கி விட்டு வருகிறேன் என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு மார்க்கெட் சென்ற இளைஞர் திரும்பி வரும்போது மனைவியுடன் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

'வலிமை' படம் குறித்த முக்கிய அறிவிப்பு: அஜித் ரசிகர்கள் அப்செட்

அஜித் நடித்து வரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கால்

பாலிவுட் நடிகர் ரிஷிகபூர் மறைவு: ரஜினி, கமல் இரங்கல்

பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் ரிஷிகபூர் நேற்றிரவு உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன்

கொரோனா சிகிச்சையில் Remdesivir மருந்தின் வெற்றியால் அமெரிக்க, ஆசிய பங்குச் சந்தைகளில் ஏற்றம்!!! நடப்பது என்ன???

Remdesivir மருந்தின் சோதனை முடிவுகளால் தற்போது வெள்ளை மாளிகை அதிகாரிகள் நம்பிக்கை பெற்று உற்சாகத்துடன் காணப்படுகின்றனர்.

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் எவை எவை? மண்டலவாரி பட்டியல்

தமிழக அரசின் தீவிர நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டாலும் தலைநகர் சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது