அண்டாவில் பிரியாணி செய்து ஆதரவற்றோருக்கு அளித்த 'அண்ணாச்சி' நடிகர்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் ஏழை எளிய மக்கள் பசி பட்டினியால் வாடி வருகின்றனர் என்பதும், பல சமூக ஆர்வலர்கள் இணைந்து தங்களால் முடிந்த வரை ஏழைகளின் பசியைப் போக்கி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சென்னையில் செயல்பட்டு வரும் இரண்டு அறக்கட்டளைகளுடன் நடிகர் இமான் அண்ணாச்சி இணைந்து, தானே பிரியாணி செய்து அதை ஏழை எளிய மக்களுக்கும், சாலையோரம் இருக்கும் ஆதரவற்ற முதியோர்களுக்கு வழங்கி வருகிறார்.

நடிகர் சந்தோஷ் உள்பட பலர் இருக்கும் இந்த அறக்கட்டளை குழுவினருடன் இணைந்து நடிகர் இமான் அண்ணாச்சி தானே பிரியாணியை கிண்டும் புகைப்படங்கள், அவை முதியோர்களுக்கு கொடுக்கும் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றன. நடிகர் இமான் அண்ணாச்சி தன்னால் முடிந்த அளவுக்கு ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வதை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.