ஒரே ஒரு க்ளிக்.. லட்சக்கணக்கில் பணம் மோசடி.. இமான் அண்ணாச்சியின் சகோதரர்க்கு நேர்ந்த சோகம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் காமெடி நடிகர்களில் ஒருவரான இமான் அண்ணாச்சியின் சகோதரர் வங்கி கணக்கிலிருந்து லட்சக்கணக்கில் மோசடி செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் பலரது கவனத்தைப் பெற்ற நெல்லை தமிழ் பேசும் இமான் அண்ணாச்சி, விக்ரமன் இயக்கிய ’சென்னை காதல்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு சூர்யா நடித்த ’வேல்’ விஜய் நடித்த ’வேட்டைக்காரன்’ அதர்வா நடித்த ’பானா காத்தாடி’ விஷ்ணு விஷால் நடித்த ’நீர் பறவை’ உள்ளிட்ட பல திரைப்படங்களின் நடித்தார். தற்போதும் அவர் ஒரு சில படங்களில் நகைச்சுவை கேரக்டரில் நடித்து வருகிறார்.
பெரிய திரை மட்டுமின்றி சின்னத்திரைகளிலும் அவர் பல நிகழ்ச்சிகளிலும் சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பாக பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 70 நாள் வரை தாக்கு பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இமான் அண்ணாச்சியின் சகோதரர் சென்னை அரும்பாக்கத்தில் வாழ்ந்து வரும் நிலையில் அவருடைய மொபைலில் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் அவரது வங்கி கணக்கில் கூடுதல் மதிப்பெண் இருப்பதால் பத்தாயிரம் ரூபாய் கிடைக்கும் என்றும் அதற்கு அவரது வங்கி தகவல்களை அனுப்ப வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இதனை நம்பி அவர் தனது வங்கி கணக்கு மற்றும் தனது மகள்களின் வங்கி கணக்கை அனுப்பிய நிலையில் அடுத்த சில நிமிடங்களில் அதிலிருந்து ஒரு லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மர்ம நபர்கள் மோசடி செய்துள்ளனர். இது குறித்து இமான் அண்ணாச்சியின் சகோதரர் கொடுத்த புகாரியின் அடிப்படையில் கிரைம் பிரான்ச் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments