நடிகர் ஹரிஷ் கல்யாண் திருமணம்: மணமகளுடன் மாஸ் புகைப்படம்!

  • IndiaGlitz, [Friday,October 28 2022]

நடிகரும் பிக்பாஸ் போட்டியாளருமான ஹரிஷ் கல்யாணுக்கு இன்று திருமணம் நடந்த நிலையில் மணமகளுடன் ஹரிஷ் கல்யாண் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

தமிழ் திரையுலகில் ’சிந்து சமவெளி’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண். அதன் பின்னர் ’அறிது அறிது’, ‘சட்டப்படி குற்றம்’, பொறியாளன்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் நடித்த ’பியார் பிரேமா காதல்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் அதேபோல் ’இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’ ’தனுசு ராசி நேயர்களே’ ’தாராள பிரபு’ ‘ஓ மணப்பெண்ணே’ போன்ற படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அவர் ’நூறு கோடி வானவில்’ ’ஸ்டார்’ மற்றும் ’டீசல்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 

இந்த நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் நர்மதா உதயகுமார் ஆகிய இருவருக்கும் இன்று காலை திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு திரை உலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

More News

தலைகீழாக படுத்திருந்தாலும் செம கிளாமர் தான்.. நடிகை பார்வதி நாயரின் வீடியோ!

தமிழ் மலையாள திரையுலகில் நடிகைகளில் ஒருவரான பார்வதி நாயர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தலைகீழாக படுத்து இருக்கும் கிளாமர் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

விக்ரமன், அசீம் இருவரையும் வெளியேற்றிய பிக்பாஸ்: வைரல் வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பாக இந்த வாரம் நடைபெற்று வரும் பொம்மை டாஸ்க்கால் நிகழ்ச்சி உச்சத்தை அடைந்து உள்ளது

டுவிட்டரை வாங்கிய அடுத்த நிமிடமே எலான் மஸ்க் செய்த அதிரடி: வீட்டுக்கு அனுப்பப்பட்ட நிர்வாகிகள்!

பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டர் நிறுவனத்தை உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க் வாங்கிய நிலையில், டுவிட்டரை வாங்கிய ஒரு சில நிமிடங்களில் அந்நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளை அதிரடியாக

பிக்பாஸ் சீசன் 6: இந்த வாரம் வெளியேறும் நபர் இவர்தான்!

கடந்த மூன்று வாரங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் சுவாரசியம் அதிகரித்து வருவதால் பார்வையாளர்களின்

விக்ரமனை வீழ்த்த நடத்தப்படும் சூழ்ச்சி ஆலோசனை. யார் யார் கலந்து கொண்டனர்?

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது, முதல் இரண்டு வாரங்கள் அமைதியாக போட்டியாளர்கள் சென்று கொண்டிருந்த நிலையில் இந்த வாரம் நடைபெற்ற பொம்மை