மீண்டும் இணையும் இயக்குனர் விஜய் - ஜிவி பிரகாஷ்! ஆனால்....

  • IndiaGlitz, [Thursday,March 29 2018]

இயக்குனர் விஜய் இயக்கிய முதல் படமான 'கிரீடம்' படம் முதல் பெரும்பாலான படங்களுக்கு இசையமைத்தது ஜி.வி.பிரகாஷ்தான் என்பது தெரிந்ததே. தற்போது ஜிவி பிரகாஷ் நடிகராக பிசியாகிவிட்டதால் விஜய்யின் ஒருசில படங்களுக்கு மட்டும் அவர் இசையமைக்கவில்லை.

இந்த நிலையில் மீண்டும் இயக்குனர் விஜய்யும் ஜிவி பிரகாஷூ இணையவுள்ளனர். ஆனால் இம்முறை இயக்குனர்-இசையமைப்பாளர் என்ற கூட்டணியில் இல்லாமல் இயக்குனர்-நடிகர் என்ற முறையில் இணையவுள்ளனர்.

ஆம், இயக்குனர் விஜய் இயக்கவுள்ள அடுத்த படத்தின் நாயகனாக ஜிவி பிரகாஷ் நடிக்கவுள்ளார். இதுவொரு த்ரில் படம் என்றும், இந்த படம் குறித்த முழு விபரங்கள் இன்னும் ஒருசில தினங்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜய் இயக்கிய 'கரு' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகவுள்ளது என்பதும் கோலிவுட் திரையுலகின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.