மீண்டும் ஹீரோவாக கவுண்டமணி.. டைட்டில் அறிவிப்பு!

  • IndiaGlitz, [Friday,January 20 2023]

தமிழ் திரையுலகின் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி கடந்த சில ஆண்டுகளாக திரையுலகில் நடிக்காமல் இருந்த நிலையில் மீண்டும் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்று கடந்த சில வாரங்களுக்கு முன்னால் செய்தி வெளியானது.

இந்த நிலையில் கவுண்டமணி நடிக்க இருக்கும் படத்தின் பூஜை என்று சென்னையில் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து அவரது படம் உறுதி செய்யப்பட்டுள்ளது. கவுண்டமணி கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தின் டைட்டில் ’பழனிச்சாமி வாத்தியார்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் மதுரை செல்வம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரிக்கிறார். கவுண்டமணி கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, கஞ்சா கருப்பு உட்பட பலர் நடிக்க உள்ளனர்.

இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றதை அடுத்து விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கவுண்டமணி இந்த திரைப்படத்தில் ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியராக நடிக்க இருப்பதாகவும் முழுக்க முழுக்க காமெடி படமாக இந்த படம் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 

More News

ஒரே மாதத்தில் மீண்டும் ஒரே நாளில் அஜித்-விஜய் படம் ரிலீஸ்!

அஜித் நடித்த 'துணிவு' மற்றும் விஜய் நடித்த 'வாரிசு' ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் விருந்தாக ஒரே நாளில் வெளியானது என்பதும் இந்த இரண்டு படங்களுக்கும்

'தளபதி 67' படத்தின் முதல் அப்டேட் இதுதானா? ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்!

 தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 11ஆம் தேதி வெளியாகி ரூ.200 கோடிக்கு அதிகமாக வசூல் செய்து ரூ.300 கோடி என்ற இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 

அமுதவாணன், ஷிவின், மைனா, அசீமை தொடர்ந்து கடைசி புரமோ வெளியீடு!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நாளை மறுநாள் உடன் முடிவடைய இருக்கும் நிலையில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற 5 போட்டியாளர்களுக்கு தனித்தனியாக வாழ்த்து கூறும் புரமோ வீடியோக்களை

இவ்வளவு தெளிவா பிளே பண்ணியிருக்கான்னா, அவன் சாதாரண ஆள் இல்லை: 'ரன் பேபி ரன்' டிரைலர்

ஆர்ஜே பாலாஜி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான 'ரன் பேபி ரன்' என்ற திரைப்படம் பிப்ரவரி 3ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகிய இணையதளங்களில்

ஓடிடிக்காக உருவாகும் சூரியின் படம்.. நாயகி இந்த பிரபலமா?

 சமீபகாலமாக திரையுலகின் நகைச்சுவை நடிகர்கள் ஹீரோவாக நடித்து வருகின்றனர் என்பதும் சந்தானம் உள்பட பல நகைச்சுவை நடிகர்கள் ஹீரோவாக வெற்றி பெற்று வருகிறார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம்