மீண்டும் கதாநாயகனாகும் கவுண்டமணி.. டைட்டில் என்ன தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக வலம் வந்த கவுண்டமணி தற்போது 83 வயதில் மீண்டும் கதாநாயகனாக ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 1964ஆம் ஆண்டு ’சர்வர் சுந்தரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் காமெடி நடிகர் கவுண்டமணி. எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி, அஜித், விஜய் உள்பட பல முன்னணி பிரபலங்களின் படங்களில் காமெடி கேரக்டர்களில் நடித்தவர் கவுண்டமணி என்பதும் கவுண்டமணியும் செந்திலும் சேர்ந்து நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த 2000 ஆண்டுகளுக்கு பின்னர் நடிப்பதை குறைத்துக் கொண்ட கவுண்டமணி ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார் என்பதும் கடைசியாக அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு ’வாய்மை’ என்ற திரைப்படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கவுண்டமணி ஹீரோவாக நடிக்கும் படம் ஒன்றுக்கு ’பழனிச்சாமி வாத்தியார்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆறு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கதாநாயகனாக கவுண்டமணி நடிக்க இருக்கும் இந்த படத்தை செல்வ அன்பரசன் என்பவரை இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மீண்டும் கவுண்டமணியை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் இந்த படம் குறித்த மேலும் சில தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments