மீண்டும் கதாநாயகனாகும் கவுண்டமணி.. டைட்டில் என்ன தெரியுமா?

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக வலம் வந்த கவுண்டமணி தற்போது 83 வயதில் மீண்டும் கதாநாயகனாக ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 1964ஆம் ஆண்டு ’சர்வர் சுந்தரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் காமெடி நடிகர் கவுண்டமணி. எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி, அஜித், விஜய் உள்பட பல முன்னணி பிரபலங்களின் படங்களில் காமெடி கேரக்டர்களில் நடித்தவர் கவுண்டமணி என்பதும் கவுண்டமணியும் செந்திலும் சேர்ந்து நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 2000 ஆண்டுகளுக்கு பின்னர் நடிப்பதை குறைத்துக் கொண்ட கவுண்டமணி ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார் என்பதும் கடைசியாக அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு ’வாய்மை’ என்ற திரைப்படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கவுண்டமணி ஹீரோவாக நடிக்கும் படம் ஒன்றுக்கு ’பழனிச்சாமி வாத்தியார்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆறு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கதாநாயகனாக கவுண்டமணி நடிக்க இருக்கும் இந்த படத்தை செல்வ அன்பரசன் என்பவரை இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மீண்டும் கவுண்டமணியை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் இந்த படம் குறித்த மேலும் சில தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'தளபதி 67', 'கைதி 2' படங்களுக்கு அடுத்து லோகேஷின் படம்: ஹீரோ இந்த பிரபலமா?

 பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 67' படத்தை இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தை அவர் இயக்கி முடித்து விட்டு கார்த்தி நடிக்கும் 'கைதி 2' படத்தை இயக்கி

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் 'தி லெஜண்ட்': எந்த ஓடிடியில் தெரியுமா?

சரவணா ஸ்டோர் அண்ணாச்சி அருள் சரவணன் ஹீரோவாக நடித்து தயாரித்து 'தி லெஜண்ட்' என்ற திரைப்படம் கடந்த ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியானது என்றும் இந்த படம் வசூல் அளவில்

அதிகாலை 4 மணி காட்சிகளுடன் ரீரிலீசாகும் 'பாபா': ரிலீஸ் தேதி இதுதான்!

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக மாஸ் நடிகர்களின் திரைப்படங்கள் அதிகாலை 4:00 மணி காட்சிகளாக திரையிடப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

'ஆர்.ஆர்.ஆர்', 'கேஜிஎஃப் 2', 'PS1' படங்களை அடுத்து 'துணிவு': அதிரடி அறிவிப்பு!

 இந்திய திரையுலகில் சமீபகாலத்தில் மிகப் பெரிய வசூலை குவித்த படங்கள் என்றால் அவை 'ஆர்.ஆர்.ஆர்', 'கேஜிஎஃப் 2', 'PS1' ஆகிய படங்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

விஜய்சேதுபதிக்கு சாபமிட்ட இயக்குனர் மிஷ்கின் .. 'டிஎஸ்பி' டிரைலர் விழாவில் பரபரப்பு

விஜய் சேதுபதி நடிப்பில் உருவான 'டிஎஸ்பி' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது என்பதும் இதில் நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட கமல்ஹாசன் கலந்து கொண்டார்