4 கால், 4 கை உள்ள சிறுமியின் சர்ஜரிக்கு உதவி செய்த பிரபல நடிகர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிறவியிலேயே நான்கு கைகள் மற்றும் நான்கு கால்கள் உள்ள சிறுமியின் சர்ஜரிக்கு பிரபல நடிகர் ஒருவர் உதவி செய்துள்ளார்.
தமிழ் உள்பட இந்தியாவின் பல மொழிகளில் நடித்து வருபவர் நடிகர் சோனு சூட். இவர் கொரோனா வைரஸ் முதல் அலையின்போது பொதுமக்களுக்கு ஏராளமான உதவி செய்தார் என்பதும் குறிப்பாக வெளிநாட்டில் படித்து கொண்டிருந்த இந்திய மாணவ மாணவியர்கள் பலரை தனது சொந்த செலவில் விமானத்தின் மூலம் சொந்த ஊருக்கு வரவழைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிறவியிலேயே நான்கு கை மற்றும் நான்கு கால் உள்ள ஒரு கிராமத்து சிறுமியின் சர்ஜரிக்கு தற்போது சோனுசூட் உதவி செய்துள்ளார். சாமுகி குமாரி என்ற சிறுமி பிறவியிலேயே நான்கு கால்கள் மற்றும் நான்கு கைகளுடன் பிறந்த நிலையில், இது குறித்த புகைப்படங்களை அவர் சமூக வலைத்தளத்தில் பார்த்தார்.
இந்த நிலையில் தானாக முன்வந்து அந்த சிறுமியின் சர்ஜரிக்கு சோனுசூட் உதவி செய்துள்ளார். தற்போது அந்த சிறுமிக்கு அதிகப்படியான இரண்டு கைகள் மற்றும் இரண்டு கால்கள் சர்ஜரி மூலம் நீக்கப்பட்டுவிட்டதாகவும், அந்த சிறுமி நலமாக இருக்கிறார் என்றும் விரைவில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்த புகைப்படங்களையும் அவர் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments