2 முறை விவாகரத்து ஆன நடிகையை 4வது திருமணம் செய்யும் பிரபல நடிகர்.. வைரலாகும் லிப்லாக் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
ஏற்கனவே 3 முறை திருமணம் செய்து விவாகரத்து செய்த பிரபல நடிகர் ஒருவர் நான்காவது திருமணம் செய்ய உள்ளதாகவும் அவர் ஏற்கனவே 2 முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற நடிகையை திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
தமிழில் வெளியான ’கௌரவம்’ ’அயோக்கியா’ ’க/பெ ரணசிங்கம்’ ’வீட்ல விசேஷம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் கன்னட நடிகை பவித்ரா. இவர் ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற நிலையில் தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் சகோதரர் நரேஷை காதலித்து வருவதாகவும், விரைவில் அவரை திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் நரேஷ் ஏற்கனவே 3 முறை திருமணமாகி விவாகரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று புத்தாண்டு தினத்தில் நடிகர் நரேஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ’புதிய வருடம்! புதிய ஆரம்பம்! புதிய வாழ்க்கைக்கு உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்கள் தேவை! என்று பதிவு செய்துள்ளார். மேலும் நரேஷ் - பவித்ரா இருவரும் லிப்லாக் செய்த வீடியோவும் அவரது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
New Year ✨
— H.E Dr Naresh VK actor (@ItsActorNaresh) December 31, 2022
New Beginnings 💖
Need all your blessings 🙏
From us to all of you #HappyNewYear ❤️
- Mee #PavitraNaresh pic.twitter.com/JiEbWY4qTQ
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments