விஜய்சேதுபதியை சந்தித்தது மிகவும் மிகழ்ச்சி: பிரபல நடிகர் பகிர்ந்த புகைப்படம் வைரல்

  • IndiaGlitz, [Tuesday,October 19 2021]

தமிழ் மற்றும் மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை சந்தித்தது குறித்து தனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்

தமிழில் வெளியான ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ உள்பட ஒருசில திரைப் படங்களிலும் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை நடிகர் துல்கர் சல்மான் சந்தித்துள்ளார். அப்போது ’தி ஃபேமிலிமென்’ தொடர் இயக்குனர்களையும் அவர் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இதுகுறித்த ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து, ‘ விஜய்சேதுபதி அண்ணா அவர்களை சந்தித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.