சினிமா பிரபலம் துல்கர் சல்மான், சுரேஷ் கோபிக்கு கொரோனா தொற்று!
Send us your feedback to audioarticles@vaarta.com
மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா நோய்த்தொற்று உறுதிச்செய்யப்பட்டது. தற்போது அவருடைய மகனும் நடிகருமான நடிகர் துல்கர் சல்மான் தனக்கு கொரோனா உறுதிச்செய்யப்பட்டு இருப்பதாக சோஷியல் மீடியாவில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்ட அவர், “எனக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளது. வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டேன். ஆனால் நலமுடன் இருக்கிறேன். படப்பிடிப்பில் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறுக் கேட்டுக்கொள்கிறேன்“ எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல மலையாள நடிகரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுரேஷ் கோபிக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச்செய்யப்பட்டு இருக்கும் தகவலை அவரே தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர், “எச்சரிக்கையாக இருந்தபோதும் கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளது. இதனால் தனிமைப்படுத்திக் கொண்டேன். லேசான காய்ச்சலைத் தவிர நலமாக இருக்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். சமூக விலகலை கண்டிப்பாக கடைப்பிடியுங்கள்“ எனக் கூறியுள்ளார்.
நடிகர் சுரேஷ் கோபி தமிழில் நடிகர் விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடித்த “தமிழரன்“ திரைப்படம் இந்த மாதம் 26 ஆம் தேதி ரிலீசாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக தமிழில் பல சினிமா பிரபலங்களுக்கு கொரோனா உறுதிச்செய்யப்பட்டதை அடுத்து அனைவரும் தங்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டனர். பாலிவுட்டில் பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மட்டும் வயது மூப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
Positive. pic.twitter.com/cv3OkQXybs
— Dulquer Salmaan (@dulQuer) January 20, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Kiara Nithya
Contact at support@indiaglitz.com