close
Choose your channels

'தல 57' படத்தில் வில்லனா? சசிகுமார் விளக்கம்

Thursday, July 21, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடிக்கவுள்ள 57வது படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் பல்கேரியாவில் தொடங்கவுள்ளது உறுதியாகிவிட்ட நிலையில் இந்த படப்பிடிப்பிற்கு தேவையான ஆயத்த பணிகளை படக்குழுவினர் விறுவிறுப்புடன் செய்து வருகின்றனர்.
இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும், இன்னொரு முக்கிய கேரக்டரில் கமல்ஹாசன் மகள் அக்சராஹாசனும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கருணாகரன் காமெடி கேரக்டரில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் வில்லன் வேடத்தில் பிரபல நடிகர் சசிகுமார் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்த செய்திக்கு பேட்டி ஒன்றின் மூலம் விளக்கம் கொடுத்துள்ள சசிகுமார், 'நான் அஜித்துக்கு வில்லனா? நான் என்றுமே அவருடைய நண்பனாகத்தான் இருப்பேன். சுயமாக வெற்றி பெற்ற அவருடைய உயரம், கைதூக்கி விட ஆள் இல்லாமல் போராடும் ஒவ்வொருத்தருக்கும் ஒரு உத்வேகம். சினிமாவில் மட்டுமின்றி தனிப்பட்ட விதத்திலும் அஜித்தை எனக்கு அவ்வளவு பிடிக்கும்' என்று கூறியுள்ளார்.
இந்த பேட்டியின் மூலம் சசிகுமார் வில்லன் இல்லை என்பது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் அஜித்தே வில்லனாகவும் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் உலாவி வருகின்றன. இதற்கான விடையை படக்குழுவினர்களின் அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்று மட்டுமே பதிலாக இருக்க முடியும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment