இரட்டை இயக்குனர்களில் ஒருவரான ராஜசேகர் காலமானார்!

  • IndiaGlitz, [Sunday,September 08 2019]

ராபர்ட் ராஜசேகர் என்ற இரட்டை இயக்குனர்களில் ஒருவராகிய ராஜசேகர் இன்று காலமானார். கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த ராஜசேகர் இன்று காலை சிகிச்சையின் பலனின்றி காலமானார்.

ராபர்ட்-ராஜசேகர் ஆகிய இரட்டையர்கள் பாலைவனச்சோலை, கல்யாண அகதிகள், தூரம் அதிகமில்லை, சின்னப்பூவே மெல்லப்பேசு, மனசுக்குள் மத்தாப்பூ, பறவைகள் பலவிதம் போன்ற படங்களை இயக்கியுள்ளனர். மேலும் இவர்கள் ‘ஒருதலைராகம்’ உள்பட ஒருசில படங்களுக்கு ஒளிப்பதிவாளர்களாகவும் பணியாற்றியுள்ளனர்.

மேலும் ராஜசேகர் புகழ்பெற்ற தொலைக்காட்சி தொடரான ‘சரவணன் மீனாட்சி’ உள்பட ஒருசில தொடர்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி சின்னத்திரை சங்கத்திலும் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடன் பணிபுரிந்த ராபர்ட் கடந்த ஆண்டு உடல்நலக்கோளாறால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த நடிகர், இயக்குனர், ஒளிப்பதிவாளர் ராஜசேகர் அவர்களுக்கு கோலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More News

27 வருடங்களுக்கு பின் ரீஎண்ட்ரி ஆகும் இயக்குனரின் படத்தில் பிக்பாஸ் நடிகர்!

கடந்த 1987ஆம் ஆண்டு அமலா நடித்த 'கவிதை பாட நேரமில்லை' மற்றும் 1992 ஆம் ஆண்டு 'மாதங்கள் ஏழு' ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் யூகிசேது

'பொன்னியின் செல்வன்' பாடல்களில் வைரமுத்து செய்யப்போகும் புதுமை!

கல்கி எழுதிய காலத்தால் அழியாத காவிய நாவலான 'பொன்னியின் செல்வன்', மணிரத்னம் அவர்களால் இரண்டு பாகங்களாக திரைப்படமாகவுள்ளது.

எங்களுக்கு ஊக்கம் அளித்து உள்ளீர்கள்: இஸ்ரோவுக்கு நாசா பாராட்டு!

நிலாவை இன்னும் சில நாடுகள் பூமியில் இருந்து அண்ணாந்து மட்டுமே பார்த்து கொண்டிருக்கும் நிலையில் இந்திய விஞ்ஞானிகளின் சீரிய முயற்சியால் நிலாவிற்கு மிக அருகில் அதாவது

மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி காலமானார்!

இந்தியாவின் மூத்த வழக்கறிஞரும் முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான ராம் ஜெத்மலானி உடல்நலக்குறைவு காரணமாக இன்று டெல்லியில் காலமானார்.அவருக்கு வயது 95.

வனிதாவை செமையாய் கலாய்க்கும் கமல்!

பிக்பாஸ் வீட்டில் வனிதா பேச ஆரம்பித்துவிட்டால் அவர் பேசி முடிக்கும் வரை வேறு யாரும் பேச முடியாது. யாராவது பேச முற்பட்டாலும் 'ஒன் மினிட்', 'நான் என்ன சொல்ல வர்ரேன்னா'