close
Choose your channels

ராகவா லாரன்ஸ் திருமண புகைப்படம்.. குவியும் ரசிகர்களின் வாழ்த்துக்கள்..!

Sunday, May 28, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் இன்று தனது திருமண நாளை கொண்டாடி வரும் நிலையில் திருமண புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இயக்குனர் மற்றும் நடன இயக்குனராக பிரபலமானவர் ராகவா லாரன்ஸ். ரஜினிகாந்த் நடித்த ’உழைப்பாளி’ என்ற திரைப்படத்தின் மூலம் நடன கலைஞராக அறிமுகமான ராகவா லாரன்ஸ், அதன்பின் ’ஜென்டில்மேன்’ உட்பட பல திரைப்படங்களில் நடனம் ஆடினார். இதனை அடுத்து அவர் பல திரைப்படங்களுக்கு நடன இயக்குனராகவும் பணிபுரிந்தார். அதுமட்டுமின்றி ’முனி’, ‘காஞ்சனா 2’ ’காஞ்சனா 3’ என ஒரு சில படங்களையும் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ராகவா லாரன்ஸ், லதா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இன்று அவரது திருமண நாள் கொண்டாடப்படுகிறது. திருமணத்தின் போது எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் ராகவா லாரன்ஸ் பதிவு செய்துள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

பல ரசிகர்கள் இப்போதுதான் உங்களுடைய திருமண புகைப்படத்தை முதன் முதலாக பார்க்கிறோம் என்று கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment