நடிகர் பார்த்திபன் சற்றுமுன் திடீரென மரணம்.. வதந்தி செய்திக்கு பார்த்திபனே அளித்த விளக்கம்!

  • IndiaGlitz, [Wednesday,January 25 2023]

திரை உலகை சேர்ந்தவர்கள் திடீரென மரணம் அடைந்து விட்டதாக வதந்தி பரப்புவதற்கு என்றே ஒரு குரூப் இருக்கிறது, குறிப்பாக யூடியூபில் திடீர் திடீரென பல நடிகர்களின் மரணம் குறித்த வதந்தி கிளம்பும் என்பது குறிப்பிடத்தக்கது

கவுண்டமணி, கனகா, மோகன், சித்தார்த் என பல நடிகர்களை யூடியூப் பயனாளிகள் பலமுறை சாகடித்து வந்த நிலையில் அந்த பட்டியலில் தற்போது பார்த்திபனையும் இணைத்துள்ளனர்.

’நடிகர் இயக்குனர் பார்த்திபன் சற்றுமுன் திடீர் மரணம்’ என தலைப்பிட்டு வீடியோ ஒன்று யூடியூபில் வைரலாகி வரும் நிலையில் இந்த வீடியோவுக்கு நடிகர் பார்த்திபனே ரியாக்ஷன் செய்துள்ளார். அவர் இது குறித்து கூறியிருப்பதாவது:

நொடிகள் மரணமடைவதும், மறுபடியும் அடுத்ததாய் உயிர்த்தெழுவதும் இயற்கை! நடிகன் பற்றிய செய்திகள் இப்படி ஊர்வலமாவதன் காரணம் புரியவில்லை! Negativity-ஐ பரப்ப இதுபோல் சில நண்பர்கள் இருக்கிறார்கள். மகிழ்ச்சியை மனதில் நிரப்புவோம் மக்களுக்கும் பரப்புவோம்!