தமிழ் திரையுலகின் நடிகர்-இயக்குனர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்

  • IndiaGlitz, [Wednesday,November 17 2021]

தமிழ் திரையுலகில் நடிகர், இயக்குனர் ,வசனகர்த்தா என்.ஆர். மனோகர் அவர்கள் இன்று காலமானார். அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

பிரபல இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான பேண்ட் மாஸ்டர், சூரியன் சந்திரன் உள்ளிட்ட திரைப்படங்களில் உதவி இயக்குனராகவும் அதன் பின்னர் சில படங்களில் வசனகர்த்தாவாகவும் பணிபுரிந்துள்ள என்.ஆர். மனோகர், பல திரைப்படங்களில் சிறு சிறு கேரக்டரில் நடித்துள்ளார். குறிப்பாக தல அஜித் நடித்த வீரம், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகர், இயக்குனர் என்.ஆர். மனோகர் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த என்.ஆர். மனோகர் ;மாசிலாமணி’ ‘வேலூர் மாவட்டம்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் திமுக எம்பி என்.ஆர்.இளங்கோ அவர்களின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விமர்சனம் செய்யுங்கள், ஆனால் கொலை மிரட்டல் எல்லாம் கண்டிக்கத்தக்கது: 'ஜெய்பீம்' குறித்து பிரபல இயக்குனர்!

நடிகர் சூர்யா நடித்து தயாரித்த 'ஜெய்பீம்' என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இன்னொரு பக்கம் இந்த படம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது

சாலை விபத்து… நடிகர் சுஷாந்த் சிங் குடும்பத்தில் மீண்டும் சோகம்!

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் பீஹார் அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது

பாவனியை சமாளிக்க முடியாமல் திணறுகிறாரா ராஜூ?

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 45வது நாளை எட்டியுள்ள நிலையில் இந்த 45 நாட்களில் போட்டியாளர்களுக்கு இடையே பல சண்டை சச்சரவுகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ரோஜாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய நீண்டநாள் தோழி நடிகை!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் நடிகை ரோஜா.

வளைகாப்பு விழாவில் கணவருடன் செம ஆட்டம் போட்ட நடிகை!

இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கிய 'ஈரநிலம்', 'ரிதம்', 'ராவண தேசம்' உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தவர் நடிகை ஜெனிபர்.  இவர் தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது