இயக்குனரானார் தமிழ் ஹீரோ: டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,March 30 2021]

பா ரஞ்சித் இயக்கிய முதல் திரைப்படமான ’அட்டகத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் தினேஷ் என்பது தெரிந்ததே. அதன் பின்னர் அவர் ’எதிர்நீச்சல்’ ’குக்கூ’ ’திருடன் போலீஸ்’ ’விசாரணை’ ’கபாலி’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். தற்போது அவர் ’வாராயோ வெண்ணிலாவே’ மற்றும் ’பல்லு படாம பாத்துக்கோ’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் தினேஷ் தற்போது இயக்குனராக மாறியுள்ளார். அவர் இயக்கி நடிக்கவிருக்கும் திரைப்படத்தின் டைட்டில் ’வயிறுடா’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் போஸ்டர் ஒன்றும் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும், இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தமிழ் திரையுலகில் எம்ஜிஆர், கமல்ஹாசன், பிரகாஷ்ராஜ், அர்ஜூன், சிம்பு, தனுஷ் உள்பட பல நடிகர்கள் இயக்குனராக மாறிய நிலையில் தற்போது நடிகர் தினேஷும் இயக்குனராகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

More News

மாலத்தீவு சுற்றுலா சென்ற மேலும் ஒரு பிக்பாஸ் தமிழ் நடிகை!

கடந்த சில மாதங்களாகவே மாலத்தீவுக்கு தமிழ் நடிகைகள் சென்று வருகின்றனர் என்பதும் அங்கிருந்து கொண்டு அவர்கள் பதிவு செய்யும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் தெரிந்ததே 

ஷாருக்கான் படத்தை இயக்கவுள்ள அட்லியிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம்: இணையத்தில் வைரல்!

தளபதி விஜய் நடித்த 'தெறி' 'மெர்சல்' மற்றும் 'பிகில்' ஆகிய மூன்று படங்களை தொடர்ந்து இயக்கிய இயக்குனர் அட்லி அடுத்ததாக ஷாருக்கான் நடிக்கும் திரைப்படத்தை இயக்க உள்ளதாகவும்,

'வலிமை' படத்தின் தமிழக ரிலீஸ் உரிமை: போனிகபூர் டுவீட்

தல அஜித் நடித்துவரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்து விட்ட நிலையில் இன்னும் ஒரே ஒரு சேஸிங் காட்சியின் படப்பிடிப்பு மட்டுமே மீதம் இருப்பதாகவும் விரைவில்

ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்புவின் பிரச்சார பாணி பலன் கொடுக்குமா?

திமுகவில் சில ஆண்டுகள், காங்கிரஸில் சில ஆண்டுகள் என அரசியலில் ஈடுபட்ட குஷ்பு தற்போது பாஜகவில் இணைந்து அந்த கட்சியின் ஆயிரம் விளக்கு தொகுதியில் வேட்பாளராக மாறியுள்ளார்.

அதிமுக ஆட்சியில் தான் தமிழகமே, அமைதிப்பூங்காவாக உள்ளது...! முதல்வர் சென்னையில் பிரச்சாரம்...!

தமிழகம் அமைதிப்பூங்காவாகவும், சென்னை தான் மகளிருக்கு பாதுகாப்பான நகரமாக இருப்பதாகவும் முதல்வர் பழனிச்சாமி அவர்கள் பிரச்சாரம் செய்தார்.