திலீப் ஜாமீன் மனு: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
- IndiaGlitz, [Tuesday,October 03 2017]
பிரபல மலையாள நடிகை ஒருவரை கடத்தி பாலியல் தொந்தரவு செய்வதற்கு மூளையாக செயல்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட பிரபல மலையாள நடிகர் திலீப் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது 86 நாட்களுக்கு பின்னர் ஜாமீன் கிடைத்துள்ளது.
வரும் அக்டோபர் 12ஆம் தேதி வரை திலீப்பின் காவல் நீட்டிக்கப்பட்ட நிலையில் அவரது ஜாமீன் மனு கேரள உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி, திலீப்புக்கு ஜாமீன் வழங்க உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே கேரள உயர்நீதிமன்றம் திலீப்பின் ஜாமீன் மனுவை இரண்டு முறையும், அங்கமாலி நீதிமன்றம் இரண்டு முறையும் தள்ளுபடி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.