ஈசிஆர் பக்கம் ரெய்டுக்கு போகாதீங்க: கேபிஒய் தீனா
- IndiaGlitz, [Sunday,March 15 2020]
கலக்க போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி, லோகேஷ் கனகராஜின் ‘கைதி’ படத்தில் நடித்த தீனா, ‘மாஸ்டர்’ ஆடியோ விழாவில் பேசியதாவது:
எனது அம்மாவும் அப்பாவும் ஒரு நல்ல மேடைக்குச் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். இதைவிட நல்ல மேடை எனக்கு கிடைக்காது. லோகேஷ் கனகராஜ் அவர்கள் தனது உதவியாளர்கள் உட்பட அனைவரையும் சொந்த தம்பியை போல் பார்த்துக்கொள்வார். அவர் என்னையும் தம்பி போல் தான் பார்த்து கொண்டார்.
அனிருத் அவர்களை நேரில் பார்க்க வேண்டும் என்ன ரொம்ப நாளா ஆசைப்பட்டேன். அந்த ஒரு வாய்ப்பு இன்று எனக்கு கிடைத்தது. மாளவிகா மோகனன் என்னிடம் படப்பிடிப்பின்போது பேசவேண்டும் என ஆசைப்பட்டார்கள். ஆனால் நான் கொஞ்சம் பிசியாக இருந்ததால் அவருடன் பேச முடியவில்லை. கூடிய விரைவில் அவருடைய ஆசையை நிறைவேற்றி வைப்பேன்.
எல்லாரும் ஒரு படத்திற்காக மட்டுமே வெயிட் பண்ணுவார்கள். ஆனால் ஆடியோ விழாவுக்கு வெயிட் பண்ணுவது என்றால் அது விஜய் அவர்களின் படமாகத்தான் இருக்கும். அவர் இதுவரை மேடையில் தனக்கு என்ன வேண்டும் என்று ஒருநாளும் கேட்டதில்லை. அவர் தனது ரசிகர்களுக்கு இது வேணும் அது வேண்டும் என்றுதான் கேட்டுள்ளார். மேடையில் மட்டுமின்றி கீழே இறங்கினாலும் அவர் அனைவரையும் அன்புடன் விசாரிப்பார்
மேலும் தமிழ் கொஞ்சம் கஷ்டமான மொழி. நாம் ஒன்று பேசினால் மற்றவர்கள் இன்னொன்றை நினைத்துக்கொள்வார்கள். ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். பைக் இருக்கின்றது என்பதற்காக வேகமாக ரைடு செய்ய வேண்டாம். குறிப்பாக ஈசிஆர் பக்கம் ரெய்டு செய்ய வேண்டாம். மீண்டுமொருமுறை கூறிக்கொள்கிறேன். நான் பேசியதில் எந்த ஒரு உள்ளர்த்தமும் கிடையாது. ஒரு படையில் எத்தனை வீரர்கள் இருந்தாலும் படையை வழிநடத்த ஒரு தளபதி வேண்டும்., அந்த தளபதி தான் நம்ம தளபதி என்று தீனா பேசினார்